இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்பார்புகளுகளுக்கு ஏற்ப இந்த நிதியாண்டின் இரண்டாவது அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸின் செப்டம்பர் வரையிலான காலாண்டு நிதி நிலை அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
நிகர லாபத்தில் சரிவு
இந்த நிறுவனத்தின் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டு நிகர லாபம் ரூ.2,410 கோடி என அறிவித்தது, மேலும் சில விதிவிலக்கான பொருள்கள் காரணமாக இது எதிப்பார்க்கப்பட்டதை விட சற்று குறைவாகும். இல்லையெனில், ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பின் படி, கிட்டத்தட்ட ரூ.2,600 கோடி லாபம் ஈட்டப்பட்டிருக்கும் .
டாலர் வருவாய் மதிப்பீடு உயர்வு
கடந்த காலாண்டில் கொடுக்கப்பட்ட முந்தைய டாலர் வருமான மதிப்பீடு 6-10 சதவீசத்தை காட்டிலும், முழு ஆண்டுக்குமான டாலர் வருமானம் மதிப்பீடு 8-10% ஆக உயர்ந்துள்ளது. டாலர் வருமான மதிப்பீடு ஆய்வாளர்களால் ஆவலுடன் அவதானிக்கப்படும் ஒரு கணிக்குறியாகும், இது மேல்நோக்கி திருத்தம் செய்யப்பட்டுள்ளது வணிக மேம்ப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
எதிர்பார்ப்புக்கு மேலான் வருவாய்
மொத்த வருவாய் ரூ.12,965 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட ரூ.12,700 கோடியை விட அதிகமாகும்.
நிறுவன வளர்ச்சி
இந்த நிறுவனம் உலகளவிலும், துறைச் சார்பாகவும் ஒரு பரந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. "பரந்தளவிலான தொகுதி வளர்ச்சி, வலுவான வாடிக்கையார்கள் சேர்க்கை, ஐந்து மிகப்பெரிய விற்பனை ஒப்பந்தங்கள் என இந்த காலாண்டில் விற்பனை வேகம் அதிகரித்துள்ளது. இந்த செயல்முறைகளை நிறைவேற்ற வழிவகுப்பதுடன், வாடிக்கையாளர்களின் நோக்கங்களை அடைவதற்கும் இது உதவும்" என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.டி.ஷிபுலால் கூறினார்.
3% பங்கு உயர்வு
இந்த நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் சந்தையை மகிழ்வித்துள்ளது, வர்த்தகத்தில் பங்குவிலை 3% உயர்ந்துள்ளது ஒரு திடமான வளர்ச்சியை நோக்கி இந்த நிறுவனம் நடைபோடும் என்பதை கருத்தில் கொண்டாலும், கடந்த சில மாதங்களில் இந்நிறுவன பங்குகளின் ஒரு சீரான போக்கு காரணமாக, தற்போதைய பங்கு விலை ரூ.3,273.90 விலையிடப்பட்டுள்ளது நியாமானது என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications