தங்கம், வெள்ளி இறக்குமதிகள் 0.8 பில்லியன் டாலர் வரை கடும் வீழ்ச்சி!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகள் கடந்த செப்டம்பர் மாதத்தின் போது, சுமார் 0.8 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான 80 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் தங்கத்தின் இறக்குமதி வரலாறு காணாத அளவிலான மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீர் செய்யும் பொருட்டு விலையுயர்ந்த இந்த உலோகத்தின் இறக்குமதிகளைக் குறைப்பதற்காக அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது இறக்குமதிகள் சுமார் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளன. மொத்த வணிகச்சரக்கு இறக்குமதிகளும் குறைவாக இருந்ததனால் ஆய்வின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 2013 செப்டம்பர் மாதத்தின் போது வர்த்தக பற்றாக்குறை 30 மாத காலகட்டத்தில் முதன் முறையாக 6.76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தகத் துறை செயலாளரான திரு எஸ்.ஆர். ராவ் கூறுகையில், "அத்தியாவசியமற்ற பொருட்களின், முக்கியமாக விலையுயர்ந்த ஆபரணக் கற்களின் இறக்குமதிகளைக் குறைக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவே வர்த்தக பற்றாக்குறை தற்போது குறைந்து வருவதற்கான பிரதான காரணமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி இறக்குமதிகள் 0.8 பில்லியன் டாலர் வரை கடும் வீழ்ச்சி!!!..

கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறை (சிஏடி) கடந்த நிதியாண்டின் போது, சுமார் 4.8 சதவீத ஜிடிபியுடன் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சிஏடியின் இந்த உயர்வுக்கு தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் அபரிமிதமான இறக்குமதிகளே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.

சிஏடியின் இந்த அதீத உயர்வு, ஏப்ரல் 30 முதல் சுமார் 15 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து கடன் தொகையை செலுத்த இயலாத நிலைக்கு நம் பொருளாதாரத்தை தள்ளியதான ரூபாய் மதிப்பின் மீது அதிக அளவிலான அழுத்தத்தைக் கொடுக்கும்.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகள், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் போது இருந்த சுமார் 21.2 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் சுமார் 8.7 சதவீத அளவு வளர்ச்சியடைந்து 23.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.

மத்திய அரசு இறக்குமதி வரியை இவ்வருடத்தில் மூன்றாவது முறையாக அண்மையில் 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தியதோடு, தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்களின் இறக்குமதிகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஆபரணத் தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெரும் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. 2012-13 ஆம் வருடத்தின் போது மொத்த இறக்குமதிகள் சுமார் 830 டன்னாக இருந்து குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold, silver imports plunge sharply to $0.8 bn in September

Gold and silver imports fell by over 80 per cent to USD 0.8 billion in September on account of a slew of measures taken by the government to curb inbound shipments of the precious metal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X