ஹவுசிங் டெவலெப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (HDFC) தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை சென்ற வார இறுதியில் வெளியிட்டது. இந்நிறுவனம் இந்தியாவின் மிக பெரிய அடமான கடன் நிறுவனமாகும், மேலும் ஹெச்டிஎஃப்சி மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் பரேக் கலந்து கொண்டார். மேலும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை தற்போது பார்ப்போம்.
மொத்த லாபம்
2013 நிதியாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 1,266.33 கோடியாகும், கடந்த ஆண்டு இதே காலாண்டை ஒப்பிடுகையில் 10 சதவிதம் அதிகமாகும்.
மொத்த சொத்து மதிப்பு
நடப்பு காலாண்டில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2,12,071 கோடியாகும் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 17 சதவிதம் அதிகரித்தது. கடந்த இதே காலாண்டில் இதன் மதிப்பு 1,80,637 கோடி மட்டுமே.
கடன் தொகை
இந்நிறுவனத்தின் நடப்பு காலாண்டில் கடன் புத்தகத்தில் குறிப்பிட்ட படி இந்நிறுவனம் சுமார் 1,84,886 கோடியை கடனாக அளித்துள்ளது. இத்தொகை கடந்த ஆண்டை விட 30,000 கோடி அதிகமாகும். கடனுக்கான குறைந்த வட்டி விகிதம் 4.1 சதவிதம்.
செயற்படா கடன்கள்
இந்நிறுவனம் அளித்த கடன் தொகையில் செயற்படா கடன்களாக இந்த வருடம் 1,473 கோடியாக உள்ளது. இது மொத்த கடன் தொகையில் 0.79 சதவிதமாகும்.
ஒட்டுமொத்த நிகர லாபம்
இந்நிறுவனத்தின் நிகர லாபம் 3,598.27 கோடியாகும் இது கடந்த ஆண்டை விட 26 சதவிதம் அதிகமாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications