சென்னை: கடந்த வார இறுதியில், எஸ்&பி 500 வரலாறு காணாத அளவு உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. எஸ்&பி என்பது அமெரிக்காவின் வர்த்தக சந்தையில் பட்டியலிட்டுள்ள டாப் 500 நிறுவனங்களின் வர்த்தக நிலையை குறிக்கும் குறியீடு. அதேபோல் ஜெர்மன் டிஏஎக்ஸ் வரலாறு காணாத புதிய அளவுக்கு உயர்ந்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸின் உயர் புள்ளி அளவிலிருந்து சுமார் 300 புள்ளிகள் மட்டுமே குறைவாக இருந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சந்தைகளுள் பெரும்பாலானவை, கடந்த ஐந்து வருடங்களாக அனுபவித்து வந்த இன்னல்களுக்குப் பின், புதிய அளவுகளை எட்டியும், வரலாறு காணாத அளவுகளுக்கு மிக நெருக்கமான அளவுகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
தங்கமோ கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக சரிவை சந்தித்து, தனது மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கை இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. தங்கம் மற்றும் ஈக்விட்டிகள் எதிர்த்திசைகளில் பயணிப்பதற்கான காரணத்தை அனுமானிப்பது ஒன்றும் கடினமானதல்ல.

முதலில், பொதுவாக நிலம் சார்ந்த அரசியல் அச்சுறுத்தல்கள் நிலவினாலோ அல்லது பொருளாதார வளர்ச்சி குன்றினாலோ தங்கம் புதுமுனைப்புடன் காணப்படும். சிரியாவின் மீதான தாக்குதல் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஈரானும் அதன் அணு செயல்திட்டம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வம் காட்டி வரும் இன்றைய சூழலில், நிலம் சார்ந்த அரசியல் அச்சுறுத்தல்களுக்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
மற்றொரு புறம், கிரீஸ் மற்றும் ஐரோப்பியாவின் புறப்பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுடன் காணப்படுகிறது, மேலும் அங்கு ஏற்படக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய பொருளாதார யூகங்கள் அனைத்தும் நீர்த்துப் போய் விட்டதாகவே தோன்றுகிறது. பொருளாதார நிலவரம் ஓரளவுக்கு சீரடைந்து வரும் இன்றைய சூழலில், தங்கம் புதுமுனைப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறு ஏதும் தென்படவில்லை. பொதுவாக நல்ல செய்தி என்பது தங்க விலைகளைப் பொறுத்தவரை எப்போதும் கெட்ட செய்தியே.
உண்மையில், பங்குகள் மீட்சியடைவதற்குரிய நல்ல செய்திகள் ஏராளமாக உள்ளன. அமெரிக்காவின் கார்ப்பரேட் வருவாய் வலுவடைந்தும், சீன பொருளாதார வளர்ச்சி துரிதமான முன்னேற்றத்துடனும், கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளின் மையமாகத் திகழ்ந்த ஐரோப்பியா தற்போது சீரடைந்தும் காணப்படுகின்றன.
இத்தகைய பின்னணியில், தங்கம் மீட்சியடைவது என்பது மிகவும் கடினமே. உண்மையில், தங்க இறக்குமதிகளை குறைப்பதற்கான இந்திய அரசின் முயற்சிகள், தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தையாக விளங்கிய இந்தியாவில், தற்போது தங்கத்திற்கான மவுசு மிகவும் குறைந்து காணப்படுகிறது.
மொத்தத்தில், கூடிய விரைவில் தங்கம் மீட்சியடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. உலகெங்கிலும் சுலபமான லிக்விடிட்டி சூழல்கள் நிலவி வருவதினால், ஈக்விட்டிகள் மேலும் துரிதமான வேகத்தை அடையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!



Click it and Unblock the Notifications