நடுத்தர நிறுவன பங்குகளின் அவல நிலை!!! 21,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்...

மும்பை: சென்செக்ஸ் 2008 ஆம் ஆண்டு உச்ச கட்டம் அடைந்ததைப் போல இப்பொழுதும் அத்தகைய நிலையை எட்ட வெறும் 300 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனம், FMCG மற்றும் டாட்டா மோட்டார்ஸ் போன்ற ஒருசில குறிப்பிட நிறுவன பங்குகளின் சிறப்பான செயல்பாட்டால் சென்செக்ஸ் தற்போது உயர்ந்துள்ளது.

எனினும் நடுத்தர நிறுவன பங்குகள் இன்னும் எந்தவொரு பெரிய உயர்வை அடையவில்லை. மேலும் பல நடுத்தர நிறுவன பங்குகள் இன்னும் தங்களது 52 வார உச்சவிலையை விட மிகக் தாழ்வான நிலையில்தான் உள்ளன. உதாரணமாக வோல்டாஸ் , ஐ.டி.பி. ஐ வங்கி , சிண்டிகேட் வங்கி , கர்நாடகா வங்கி , கிராம்டன் கிரீவ்ஸ் போன்ற சில நடுத்தர நிருவனங்கள்.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் தங்களது வாழ்நாள் அதிகபட்ச உயர்வை எட்டும் நிலையை எதிர்நோக்கியுள்ள இந்த காலகட்டத்திலும், மேற்கண்ட நிறுவன பங்குகள் 52 வார உச்சவிலைக்கு வெகு தொலைவில் உள்ளன.

சீமென்ஸ், ஐடிபிஐ வங்கி

சீமென்ஸ், ஐடிபிஐ வங்கி

அதைப்போலவே மற்றொரு எடுத்துக்காட்டாக சீமென்ஸ் உள்ளது. அதன் 52 வார உச்ச விலையான ரூ.712 விட மிக குறைந்த விலைக்கு (ரூ.538) அதன் பங்குகள் தற்போது விற்பனையாகின்றன. அதேவேளையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகள் அதன் 52 வார உச்ச விலையின் (ரூ.118) பாதி மதிப்பில் மிக குறைந்த விலைக்கு (ரூ 65) விற்பனை ஆகிறது.

சரிவில் இருக்கும் நிறுவனங்கள்

சரிவில் இருக்கும் நிறுவனங்கள்

JSW ஸ்டீல் , பயோகான் , பாரத் ஃபோர்ஜ் போன்ற பல நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் விஷயத்திலும் இதே கதைதான்.

பன்னாட்டு நிறுவனங்களின் மீது மோகம்

பன்னாட்டு நிறுவனங்களின் மீது மோகம்

பங்குகளின் மதிப்பீட்டு நிலையை வைத்துப் பார்த்தால், சில நடுத்தர நிறுவன பங்குகள் அவற்றின் புத்தக மதிப்பை விட மிகக் குறைந்த விலையிலும் மற்றும் குறைந்த விலை ஆதாய விகிதத்திலும் விற்கின்றன. பன்னாட்டு முதலீடுகள் பெரும்நிறுவனங்களின் பங்குகளை மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக மாற்றிவிட்டன.

எஃப்எம்ஜிசி (FMCG)

எஃப்எம்ஜிசி (FMCG)

உண்மையில் பெருநிறுவன பங்குகள், குறிப்பாக FMCG துறையைச் சார்ந்த சில பங்குகள் மற்றும் மருந்து துறையின் பங்குகள் அவற்றின் விலை ஆதாய விகிதத்தை விட 30 மடங்கு அதிகமான விலையில் உள்ளன.

2-7% ஈவுத்தொகை

2-7% ஈவுத்தொகை

மேலும் தரமான சில நடுத்தர நிறுவன பங்குகளை வாங்குவதின் மூலம் நீண்டகால அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் சில நடுத்தர நிறுவன பங்குகளை வெறும் 7-8 மாதங்களுக்கு வைத்திருந்தோமானால் 2 முதல் 7 சதவிதம் வரையிலான ஈவுத்தொகையை கொடுக்கின்றன.

பங்கு சந்தை

பங்கு சந்தை

சந்தை சீரான நிலையில் செல்லவேண்டுமானால் பெருநிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளின் பங்கு மதிப்பீட்டு இடைவெளி சுருங்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+