சென்னை: இன்றைய வர்த்தக சந்தை துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டது. இதன் விளைவாக மும்பை பங்கு சந்தை 21,096 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிப்டியிலும் 6,292 புள்ளிகள் வரை எட்டி உள்ளது.
எனவே பங்கு சந்தையில் இந்திய ஸ்டேட் வங்கி, ஏர்டெல், விப்ரோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் 1 சதவிதம் முன்னேற்றத்துடன் சிறப்பாக வர்த்தக செய்யப்பட்டாலும், ஒஎன்ஜிசி, சன் பார்மா, சிப்லா போன்ற நிறுவனங்கள் சரிந்துள்ளது.

இதேபோல் ரூபாய் மதிப்பும் இன்று 10 காசுகள் உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.61.35 என்று உயர்ந்துள்ளது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 31) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.2 அதிகரித்து 2910.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.2 உயர்ந்து ரூ.3079.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 29,100
ஹைதராபாத் : ரூ. 29,170
பெங்களூரு : ரூ. 29,150
கொல்கத்தா : ரூ. 29,130
டெல்லி : ரூ. 28,990
மும்பை : ரூ. 28,950


Click it and Unblock the Notifications