டெக்சாஸ்: அமெரிக்க விசா ஒழுங்குமுறைகளை மீறியதற்காக முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் மேல் சுமத்தப்பட்ட குற்றத்திற்காக 34 மில்லியன் டாலர் கட்டுவதற்கு கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
"டெக்சாஸின் கிழக்கு மாகானத்தில் உள்ள அமெரிக்க சட்டப் பதிவு அலுவலகத்தில் இப்பணத்தை கட்டிவிட்டால், யூ.எஸ். டிபார்ட்மெண்ட் ஆப் ஸ்டேட், இம்மிக்ரேஷன்ஸ் அண்ட் கஸ்டம்ஸ் என்போர்ஸ்மெண்ட் மற்றும் யூ.எஸ். டிபார்ட்மெண்ட் ஆப் ஹோம்லேன்ட் செக்யூரிட்டி போன்றவைகளுடன் ஏற்பட்ட சிக்கல் நீங்கும்" என்று அந்நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

I-9 சம்பந்தப்பட்ட ஆவண பிழைகள் மற்றும் விசா விஷயங்களின் குற்றங்களும் விசாரணையும் யூ.எஸ். பெடெரல் ஏஜென்சிகளுக்கு உட்பட்டது என்றும் இன்போசிஸ் கூறியுள்ளது. வேலை செய்பவர்களின் அடையாளத்தை சோதனை செய்வதும் அமெரிக்காவில் அவர்கள் வேலை செய்வதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிப்பார்க்கவும் I-9 படிவத்தை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம்.
2010-11 வருடத்தில் தான் இது சம்பந்தமாக பிழைகள் ஏற்பட்டுள்ளது என்றும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது. 2011-ல் இதற்கான விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த பிழைகளை தான் சரிசெய்ய தொடங்கி விட்டதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது.

இந்த குற்றத்தை பற்றி இன்போசிஸ் கூறுகையில், "எந்த ஒரு இன்போசிஸ் பணியாளரும் தன் விசா காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டில் வேலை செய்தற்கான, I-9 ஆவண அத்துமீறலுக்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை". "ஊடுருவிச் செல்லும் விசா மோசடி, போட்டி பயனுக்காக விசாவை தவறாக பயன்படுத்துவது மற்றும் இம்மிக்ரேஷனை தவறாக பயன்படுத்துதல் போன்ற செயல்களில் இன்போசிஸ் ஈடுபடவில்லை என்பது இந்த தொகையை கட்டுவதன் ஒரு பகுதியாகும்." என்றும் இன்போசிஸ் கூறியுள்ளது.
நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலைக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் பணியாளர்களுக்கு H-1B விசா எடுப்பதற்காக குறுங்கால B-1 விசாவை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் அந்நிறுவனம் மறுத்துள்ளது.
"இந்த பணத்தை கட்ட நாங்கள் ஒத்துக் கொண்டதால் இவ்வழக்கு நீண்ட காலமாக இழுத்துக் கொண்டே போகாது. அதனால் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை அளிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்த முடியும்" என்று இன்போசிஸ் கூறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications