ஹெச்டிஎஃப்சி வங்கியின் வட்டி விகித மாற்றம்!!! செம கடுப்பில் மக்கள்..
மும்பை: ஹெச்டிஎஃப்சி வங்கி இன்று தனது கடன் நிதிகளுக்கான அடிப்படை விகிதத்தை 0.20 சதவிதம் அதிகரித்து இப்பொழுது 10 சதவிதமாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் அதனை பின்தொடர முன்வந்துள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதம் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

இந்த திருத்தப்பட்ட வட்டி வகிதம் விட்டு கடன் பெற்றவர்களின் ஈஎம்ஐ-களில் (EMI) அதிகமாக பாதிக்கப்படும். (விட்டு கடன் வாங்கியவர்களுக்கு எல்லாம் தலையில் துண்டு தான்)
ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று ரெப்போ விகிதத்தை 0.25 சதவிதம் அதிகரித்தது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அதிகரித்து குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications