சென்னை: கடந்த வாரத்தின் வர்த்தக சந்தை முடிவில் மும்பை பங்கு சந்தையின் டாப் 10 நிறுவனகளின் சந்தை முதலீடு சுமார் ரூ.45,061 கோடி சரிந்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடதக்கது. விழா காலத்தை முன்னிட்டு சந்தை மந்தமாக காணப்பட்டாலும், இத்தகைய பெரு நிறுவனங்களில் ஏற்ப்பட்ட சரிவு வர்த்தகர்களிடையே கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது.
இத்தகைய சரிவில் முதல் முன்று இடங்களை பிடித்திருப்பது ஐடிசி, டிசிஎஸ், மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்.
ஐடிசி
ஐடிசி நிறுவனம் தனது சந்தை முதலீட்டில் ரூ.10,925 கோடி குறைந்தது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனம் தனது சந்தை முதலீட்டில் ரூ.10,406 கோடி குறைந்தது, தற்போது அதன் மதிப்பு ரூ.4,04,922 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்
அதேபோல் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனதி எண்னெஸ் சுத்திகரிப்பு ஆலையில் கடும் பரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக அதன் சந்தை மதிப்பு ரூ.6,290 குறைந்தது.
பாரதி ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளித்து வந்தலும், சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக மக்களிடைய கருத்து நிலவி வருகிறது. மேலும் கடந்த வாரத்தின் இறுதியல் அதன் சந்தை மதிப்பு சமார் ரூ.5,177 கோடி சரிந்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
இந்தியாவின் முதன்மை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இந்த சரிவில் இடம்பெற்றது.
பட்டியலில்
மேலும் இந்த பட்டியலில் சன் ப்ர்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும் என்பது சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியூட்டி உள்ளது.இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்ளும் ப்ளு சிப் பங்குகள் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications