இந்தியாவில் பிசினஸ் செய்ய சரியான இடம் எது தெரியுமா பாஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு நாம் பலவற்றை கருத்தில் கொள்வது இயல்பு, இதில் முக்கியமான ஒன்று நாம் தொழில் தொடங்கும் இடம். வியாபாரத்தின் லாபம், நஷ்டம் என்று அனைத்தும் இடத்தை பொருத்து தான் அமையும், எல்லா இடங்களும் வியாபாரத்திற்கு ஏற்றதாக அமையாது, அப்படி அமைந்தால் உண்மையிலே வியாபாரம் லாபகாரமாக அமையும்.

தொழில் தொடங்க ஏற்ற இடத்தை அறிய உலகவங்கி நடத்திய ஆய்வில், பெங்களூரு தான் வணிகம் செய்ய மோசமான இடமாகும். உலகவங்கியின் இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது டெல்லி, பாட்னா போன்றவை இதில் வர்த்தக தலைநகரமான மும்பை கூட இதில் இடம் பெறவில்லை என்பது தான் ஆச்சரியம்.

உலக வங்கி இந்த ஆய்வில் 17 நகரங்களை உட்படுத்தி உள்ளது. சரி நாம் இங்கு இந்தியாவில் வியாபாரம், வணிகம் போன்றவற்றை செய்ய டாப் 10 இடங்களை இங்கே பார்ப்போம்.

பெங்களூரு

பெங்களூரு

பொதுவாக பெங்களூரு என்றால் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும். மேலும் வணிகத்திற்கு மிகவும் ஏற்ற இடம் என்று நினைத்தால் உலக வங்கியின் சர்வேயின் படி பெங்களூரு இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததுள்ளது.

பொருளாதார வளர்ச்சி 10.3 சதவிதம் கொண்டது பெங்களூரு நகரம்.மேலும் இந்தியாவின் இரண்டாம் மிக பெரிய நகரம் பெங்களூரு.

 

கொச்சி

கொச்சி

கேரளத்தின் வர்த்தக தலைநகரம் கொச்சி. இங்கு தான் கொச்சி பங்கு சந்தை அமைந்துள்ளது, கேரளத்தில் இருந்து பங்கு சந்தையில் அதிகளவில் செய்ய இதுவே காரணமாக அமைந்தது.

மேலும் கொச்சி, பெங்களூரை போலவே மென்பொருள் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த பட்டியலில் கொச்சி 9ஆம் இடத்தை பிடித்தது.

 

ராஞ்சி

ராஞ்சி

இந்தியாவில் வர்த்தக ரிதியாக 2ஆம் முக்கிய நகரம் ராஞ்சி. ஆனால் இந்த பட்டியலில் ராஞ்சி பிடித்திருக்கும் இடமோ 8.

அகமதாபாத்

அகமதாபாத்

பவர், எனர்ஜி, சுகாதாரத் துறையில் அதிகளவில் பணம் சம்பாதிக்க அகமதாபாத் சரியான இடம். மேலும் பல பட்டதாரிகள் தங்களில் புதிய நிறுவனங்களை அகமதாபாதில் துவங்க ஆர்வமாக உள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் ஆடை உற்பத்தி மற்றும் மணிக்கற்களின் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்குகிறது.

 

கவுகாத்தி

கவுகாத்தி

கவுகாத்தி இந்த பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மும்பை

மும்பை

நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பை அனைத்து வகையான தொழில்களிலும் சிறந்து விளங்கி வருகிறது. ஆனாலும் இந்த பட்டியலில் மும்பை பிடித்திருப்பது 5ஆம் இடம்.

கொல்கத்தா

கொல்கத்தா

இந்தியாவின் கிழக்கு பகுதியில் வர்த்தக தலைநகராக விளங்கும் கொல்கத்தா இந்த பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கொல்கத்தாவில் இந்தியாவின் பல முன்னனி நிறுவனங்களின் தலைமை அலுவலகம் இருக்கிறது இதில் ஐடிசி, கோல் இந்தியா, பிரிட்டானியா நிறுவனங்களும் அடங்கும்.

 

சென்னை

சென்னை

நம்ம சென்னை இதில் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது குறிப்பாக ஆட்டோமொபைல், வர்த்தகம், கல்வி, பொருளாதார துறை.

இது மட்டும் அல்லாமல் மென்பொருள், தொழில்நுட்பம், வன்பொருள் உற்பத்தியில் உலக நாடுகளுக்கு போட்டியாக விளங்குகிறது.

 

குர்கான்

குர்கான்

குர்கான் ஒரு சிறு நகரம் தான் ஆனால் கடந்த சில வருடங்களில் இக்கிராமத்தின் வளர்ச்சி வான் அளவு உயர்ந்தது. மேலும் இங்கு இந்தியாவின் 250 முன்னணி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளது.

இந்த பட்டியலில் குர்கான் பிடித்துள்ள இடம் 2.

இந்தூர்

இந்தூர்

உலக நாடுகளின் பல முன்னணி நிறுவனங்கள், இந்தயாவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த தனது நிறுவனத்தை இந்தூரில் துவங்கியுள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Most Sought After Business Destinations

World Bank report says, Bangalore is the worst place to do business at. The survey does not even include countries financial capital Mumbai, but places Delhi, Patna on the top.
Story first published: Tuesday, November 12, 2013, 17:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X