சென்னை: இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 13.47 விழுக்காட்டை எட்டி தொடர்ந்து நான்காவது மாதமாக இரண்டிலக்க விழுக்காட்டு வளர்ச்சியில் பயணித்துள்ளது. நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி நிலையில், இது ஒரு நல்ல திருப்புமுனையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விழாக்காலங்களையொட்டி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பினை ஈடு செய்யுமளவிற்கு இந்த ஏற்றுமதி மதிப்பு வலுவானதாக இல்லை.

இதன் காரணமாக வர்த்தகப்பற்றாக்குறை அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட அரசு விவரங்களின்படி வர்த்தகப் பற்றக்குறையானது கடந்த இரண்டாண்டுகளிலேயே குறைந்து, செப்டம்பர் மாதத்தில் 670 கோடி டாலர் அளவிலிருந்து அக்டோபர் மாதம் 1056 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அளவு 80 கோடி டாலர் என்ற அளவிலிருந்து 137 கோடி டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக அந்த விவரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட அளவான 325 பில்லியன் கோடி டாலர் ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டமுடியும் என்று அரசு நம்புவதாக வர்த்தக செயலர் திரு எஸ் ஆர் ராவ் திங்களன்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பெருகிவரும் நடப்பு பற்றாக்குறை அல்லது அந்நிய செலவாணி வரவுகளை மிஞ்சிய செலவுகள், தங்க இறக்குமதி மீதான தடைகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும், பற்றாக்குறை அளவை 60 பில்லியன் டாலர் என்ற அளவுக்குள் வைத்திருப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்க இறக்குமதி உயர்ந்திருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட பற்றாக்குறை அளவான 60 பில்லியன் டாலர் என்ற அளவுக்குள் நடப்புப்பற்றாக்குறையை அரசு வைத்திருக்க முடியும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதிகாரபூர்வ தங்க இறக்குமதி அளவுகள் அரசின் நடவடிக்கைகளினால் குறைய தொடங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications