சென்னை: இன்று தங்கம் வர்த்தக துவக்கத்தில் தங்கம் மீதான வர்த்த்கம் மந்தமாக இருந்தது, இதனால் தங்கத்தின் விலை குறைவான அளவே உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பங்கு சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 140 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
பங்கு சந்தையின் வர்த்தகத்தில் இன்று மந்த நிலை நிலவுவதால் மும்பை பங்கு சந்தையில் சுமார் 70 புள்ளிகள் சரிந்து 20534.66 புள்ளிகளை அடைந்தது. நிப்டியில் 19 புள்ளிகள் சரிந்து 6096.20 புள்ளிகளை அடைந்தது.
மேலும் மும்பை பங்கு சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் நேற்று 3 சதவீத வளர்ச்சியுடன் ஆக்சிஸ் வங்கி நுழைந்தது. அதனால் ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் இப்பட்டியலில் இருந்து வெளியேறியது.
கடந்த சில தினங்களாக நிலையற்ற தன்மையில் வர்த்தகம் ஆகிவரும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62.35 ரூபாயாக உள்ளது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2884.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 3054.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,800
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,780
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,850
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,740
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,840
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,720


Click it and Unblock the Notifications