இணையதள மோசடிகளால் ரூ.219 கோடி இழப்பு!!! சிபிஐ விளக்கம்...

டெல்லி: இணையதள மோசடிகள் மூலம் 2011 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 219.73 கோடி ரூபாய்களை வருவாயை அரசு இழந்துள்ளதாகவும், மேலும் 24,882 வழக்குகள் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிலும் சிபிஐ-இடமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசு வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

"ரிசர்வ் வங்கியிடம் உள்ள விவரங்கள் படி, 2011-12, 2012-13 மற்றும் 2013-14 (செப்டம்பர் வரை) ஆண்டுகளில் சுமார், ரூ.38 கோடி, ரூ.67 கோடி மற்றும் ரூ.54 கோடி அளவிற்கு அரசு வருவாய் இழந்துள்ளது" என்று செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் மிலிந்த் தியோரா எழுது மூலம் மாநிலங்களவைக்கு பதிலளித்துள்ளார்.

இணையதள மோசடிகளால் ரூ.219 கோடி இழப்பு!!! சிபிஐ விளக்கம்...

இதில் சிபிஐ 2011ஆம் ஆண்டில் ரூபாய் 8.85 கோடி மதிப்புள்ள வழக்குகளும், 2012 ஆம் ஆண்டில் 3.39 கோடி ரூபாய் மதிப்புள்ள வழக்குகளும், 2013 ஆம் ஆண்டில் (நவம்பர் வரை) ரூபாய் 48.49 கோடி ரூபாய் மதிப்புள்ள வழக்குகளையும் பதிவுசெய்துள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

"ஆர்பிஐ விவரங்கள் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 20,000 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐயிடம் 50க்கும் மேற்பட்ட வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

திரு தியோரா கூறுகையில், இனைய சேவைகள், அலைபேசி, கணினி, தகவல் தொழில்நுட்பப் பெருக்கம், மின்னணு வர்த்தகம், கடன் மற்றும் பண அட்டைகளின் மூலம் பரிவர்த்தனைகள் போன்றவற்றின் ஊடுருவலால் இணையதள மோசடிகள் சமீபகாலமாக உயர்ந்தவண்ணம் உள்ளன என்றார். "எனினும், இந்த உயர்வு, உலகம் முழுவதும் நடைபெறும் இனைய நிகழ்வுகளை ஒத்தே உள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.

காவல் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை மாநிலத்தைச் சார்ந்தவை என்றும், மாநில அரசுகள் மற்றும் ஐக்கிய பகுதிகளின் நிர்வாகங்கள் இந்த குற்றச்செயல்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, பதிவுசெய்வது மற்றும் விசாரிப்பது போன்ற முக்கிய பொறுப்புகளை வகிப்பதோடு குற்றவாளிகளை அந்தந்த சட்ட எல்லைக்குள் தண்டிக்கவும் செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பில் உள்ள சட்டங்கள் இணையக் குற்றங்களை தடுக்க இயலுமா என்ற கேள்விக்கு "ஏற்கனவே உள்ள சட்டமான தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் இதுபோன்ற குற்றங்களுக்கு விதிகளை வகுத்துள்ளன" என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+