மும்பை: தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மகிழ்வதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் ஹய் டெக் முறையில் திருட்டு கொள்ளை. இத்தகைய திருட்டுகளை மையப்படுத்தி மக்களவில் பல கேள்விகள் எழுந்தது.
புதன் கிழமை நடந்த மக்களவை கூட்டத்தில் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மிலிந் தியோரா, 2013 ஆண்டில் மட்டும் சுமார் 6,034 வழக்குகள் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளுக்கு எதிராக பதிவாகி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது எனதெரிவித்தார்.

மேலும் இதில் 2,646 வழக்குகள் ஹேக்கிங் முறையில் மோசடியிலும், 1440 வழக்குகள் கணினி தொலைந்ததன் மூலம் மோசடி செய்யப்பட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
தேசிய குற்ற ஆவண பிரிவின் தகவல்கள் படி 259 சைபர் குற்ற வழக்குகளும், 118 குற்றம் செய்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த வழக்களின் மீது சுமார் 749 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அந்த அறிக்கை தெரிவிக்கிகிறது.
மேலும் சமுக வலைதளங்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு பல மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். சமுக வலைதளங்களில் பல்லாயிறக்கனக்கான போலி கணக்குகள் உள்ளது. இதனை அகற்றுவது மிகவும் கடினம் என்றாலும் இதற்காக பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது என மிலிந் தியோரா தெரிவித்தார்.
இத்தகைய மோசடிகளை தடுக்கவும், குறைக்கவும் பொது மக்களுக்கு பல விழிப்புணர்வு அளிக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. சமுக வலைதளங்களில் பாதுகாப்புடன் செயல்படவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications