வீட்டுக்கடன் திட்டத்தில் பெண்களுக்கு சூப்பர் ஆஃபர்!!! பாரத ஸ்டேட் வங்கி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்கடன் திட்டத்தில் பெண்களுக்கு சூப்பர் ஆஃபர்!!! பாரத ஸ்டேட் வங்கி..
மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, நேற்று புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கான கடன் விகிதங்களை சுமார் 0.4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது ஆர்பிஐ அதன் முக்கிய பாலிஸி விகிதங்களை நிலுவையில் வைத்துள்ளது இதன் காரணமாக ஸ்டேட் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இக்கடனில் பெண்களுக்கு கூடுதலாக, கார்டு ரேட்களில் சுமார் 0.5 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்கள் திட்டங்களை தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு கீழ் மற்றும் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் என்ற இரண்டு வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

சுமார் 75 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகை, புதிதாக கடன் பெறுவோர்க்கு, தற்போது நடைமுறையில் உள்ள 10.50 சதவீதத்துக்கு எதிராக சுமார் 10.15 சதவீதத்தில் வழங்கப்படும். கடன் பெறுவோரில் பெண்களுக்கு, சுமார் 0.05 சதவீத சலுகைக்குப் பின் வட்டி விகிதம் 10.10 சதவீதமாக இருக்கும்.

புதிய கடன் விகிதங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

75 லட்ச ரூபாய்க்கு மேலான கடன் தொகைகளைப் பொறுத்தவரை, புதிய விகிதம் சுமார் 10.30 சதவீதமாக இருக்கும். கடன் பெறுவோரில் பெண்களுக்கு இந்த விகிதம் சுமார் 10.25 சதவீதமாக இருக்கும்.

30 வருடங்கள் வரையிலான கடனுரிமை காலத்துக்கான புதுப்பிக்கப்பட்ட இஎம்ஐ, சுமார் 885 ரூபாய் (பெண்களுக்கு) மற்றும் 889 ரூபாய் (மற்றவர்களுக்கு) ஆக இருக்கும். 1 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கான வழக்கமான இஎம்ஐ, 30 வருடங்களுக்கு சுமார் 900 ரூபாயாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), புதன் கிழமையன்று நடைபெற்ற அதன் மானிட்டரி பாலிஸி மறுசீராய்வின் போது, குறைந்த கால கடன் விகிதத்தை எவ்வித மாற்றமுமின்றி 7.75 சதவீதமாக வைத்திருக்கவும், கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சிஆர்ஆர்) 4 சதவீதமாகவே வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ, அக்டோபர் மாதத்தில், கார் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்துள்ளதோடு, பண்டிகைக்கால மவுசை பயன்படுத்திக் கொண்டு பணம் செய்யும் நோக்கில் ப்ராசஸிங் கட்டணங்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI slashes home loan rates by up to 0.4%

Country's largest bank SBI, on Thursday, cut home loan rates by up to 0.4 per cent for new borrowers, a day after RBI kept its key policy rates on hold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X