மும்பை: இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி 15 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை வீட்டுக் கடன்களின் வட்டி விகிதத்தை குறைத்ததன் மூலம், ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ வங்கிகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
ஐசிஐசிஜ வங்கி ரூ.75 இலட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 10.40%-ல் இருந்து 10.25% ஆக குறைத்துள்ளது. இதற்கு மேல் பெறப்படும் தொகைக்கான வட்டி விகிதத்தை 10.65%-ல் இருந்து 10.50% ஆக குறைத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ ரேட் (Repo Rate) அளவை உயர்த்துவதில்லை என்று நிதிக் கொள்கை தொடர்பாக நடந்த சந்திப்பில் கடந்த வாரம் முடிவெடுத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவை ஐசிஐசிஐ வங்கி எடுத்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கொள்கைகளுக்கான முடிவுகளை நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்த அடுத்த நாளில், புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி விகிதத்தை ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் 0.4% குறைத்தன.
பெண்களுக்கு சாதகமான வாய்ப்புகள்
இந்த வீட்டுக் கடன் பெண்களுக்கு வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.05 சதவீதம் அளவிற்கு கழிவு கிடைக்கும் என்று, நாட்டின் மிகப்பெரிய கடன் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி தெரிவிவத்தது. பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்களை ரூ.75 இலட்சத்திற்குள் மற்றும் ரூ.75 இலட்சத்திற்கும் மேல் என இரண்டு பிரிவுகளில் அளித்து வருகிறது.
35 புள்ளிகள் குறைப்பு
ரூ.75 இலட்சம் வரையிலாக புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு தற்போது 10.15% ஆக வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. முன்னதாக இந்த விகிதம் 10.50% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0.05% குறைப்பு
இது கடன் விகிதத்தில் பெண்களுக்கு கூடுதலாக 0.05% அதிகமான கழிவு தரப்படும். அதாவது ரூ.75 இலட்சம் வரை கடன் பெறும் பெண்களுக்கான வீட்டுக் கடன்களின் வட்டி விகிதம் 10.10% ஆக இருக்கும். ரூ.75 இலட்சத்திற்கும் அதிகமான வீட்டுக் கடன்களில் இந்த வட்டி விகிதம் 10.30% ஆகவும், பெண்களுக்கு இந்த அளவு 10.25% ஆகவும் இருக்கும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த வட்டி விகிதங்கள் நாளையிலிருந்து அமலுக்கு வரும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
நாட்டிலேயே மிகப்பெரிய வீட்டு வசதி நிதி நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎஃப்சி 0.25% அளவிற்கு வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. "இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடைமுறையிலிருக்கும் சலுகையாகும், ஜனவரி 31-க்குள் தரப்படும் விண்ணப்பங்களுக்கு இந்த சலுகைகள் தரப்படும், மற்றும் இந்த கடனுக்கான முதல் பட்டுவாடா பிப்ரவரி 28, 2014-ம் நாளில் செய்யப்படும்" என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய அறிக்கையில்


Click it and Unblock the Notifications