சென்னை: பாலின் உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதால் அதன் கொள்முதல் விலையையும் இன்று முதல் அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு சுமையை மக்களின் மீது திணிக்கவில்லை தமிழக அரசு. (நல்ல முடிவு சி.எம்)
மாநில அளவில் செயல்படும் பால் டிஸ்ட்ரிப்யூடரான ஆவின் நிறுவனத்துக்கு பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பால் வளர்ச்சித் துறை அமைச்சர் வி.மூர்த்தி ஆகியோர்களுடன் அவருடைய அவைக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற ஒரு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
3 ரூபாய் அதிகரிப்பு
இந்த விலை உயர்வின்படி, பசும் பால் மற்றும் எருமைப் பாலின் கொள்முதல் விலையை 3 ரூபாய் அதிகரித்துள்ளது அரசாங்கம்.
விலை ஏற்றத்திற்கான காரணம்!!!
மாட்டுத் தீவனம் மற்றும் கூலியின் விலைகள் உயர்ந்து விட்டதையொட்டி உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதால் பாலின் விலைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பாலை வழங்குபவர்கள் கோரியுள்ளதாலே (விவசாயிகள்) இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதிய கொள்முதல் விலை..
அதன் படி ஒரு லிட்டர் பசும்பாலின் புதிய கொள்முதல் விலை இனி 23 ரூபாயாக இருக்கும். அதே போல் எருமைப்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 31 ரூபாயாக இருக்கும். இந்த முடிவினால் கூட்டுறவு துறையின் கீழ் பால் வழங்கும் 22.50 லட்சம் விவசாயிகளும் பயனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த விலை மாற்றம் ஜனவரி 1, 2014 முதல் அமுலுக்கு வரும்.
மக்களின் நலனை கருதி!!!..
"இந்த விலை உயர்வினால் பால் உற்பத்தியாளர்களின் மொத்த வருமானம் வருடத்திற்கு 273.75 கோடி ரூபாயாக உயர்ந்து, அதனால் அவர்கள் மேலும் பயனடைவார்கள். மக்களின் நலனை கருதி, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் கூட மக்களுக்கு வழங்கப்படும் பாலின் விலை உயர்த்தப்பட மாட்டாது. ", என்று ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications