சூதாட்டத்தை விட 'ஷாப்பிங்' மோசமான நோய்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வண்ணமயமாக இருக்கும் காலணியாகட்டும், பேஷன் மிக்க கண்ணாடியாகட்டும் - எதுவாக இருந்தாலும் பார்க்கும் நமக்கு வாங்க வேண்டும் என்று தூண்டப்படுவது இயற்கை தான். இந்த பொருட்களை வாங்குவது தேவைக்காக என்றில்லாமல், ஆசைக்காக என்று மாறும் போது தான் பிரச்சனை தொடங்குகிறது.

இது பெண்களுக்கான டாபிக் என்று ஆண்கள் கண்டுக்கொள்ளாமல் விட வேண்டாம், ஆண்களும் இன்றளவில் இதே போல மாறியுள்ளனர் என்பது தான் உண்மை.

('ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?)('ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?)

ஷாப்பஹாலிக்

ஷாப்பஹாலிக்

இந்த வகையில் ஆசைப்பட்டு அதீதமாக பொருட்களை வாங்கிக் குவிப்பர்வகள் சாதாரணமாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் என்ற கட்டத்தை தாண்டி ஷாப்பிங் மோகம் பிடித்தவர்களாக மாறுவதை தான் ஷாப்பஹாலிக் (Shopaholic) என்ற கோளாறாக சொல்கிறோம். ஆனால் ஈகாமர்ஸ் துறை வளர்ச்சியால் உட்கார்ந்த இடத்தில் இருந்த நாம் அனைத்து பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறோம். இது ஷாப்பஹாலிக் விட மோசமான நோய்.. சோம்பேறித்தனம்..

இதற்கு என்ன தீர்வு..?

இதற்கு என்ன தீர்வு..?

அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், சூதாடுதல் அல்லது போதை பொருட்களை உட்கொள்ளுதல் போலவே இந்த கோளாறும் நம்முடைய வாழ்க்கையை சிதைத்து விடும். அதில் இருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்.

புயல் போல பிரச்சனை

புயல் போல பிரச்சனை

இவ்வாறு ஷாப்பிங் மோகம் கொண்டவர்கள் அசாதாரணமாக செலவுகள் செய்வதால் அவர்களுடைய வாழ்வில் உணர்வு ரீதியாகவும் மற்றும் பண ரீதியாகவும் பிரச்னைகள் தொடர்ந்து புயல் போல கிளம்பிக் கொண்டே இருக்கும்.

ஷாப்பிங் என்பது நோய்!!

ஷாப்பிங் என்பது நோய்!!

ஷாப்பிங்கிற்கு அடிமையாகி விட்ட இவர்கள் இவ்வாறு அளவுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்வதால் ஏற்படும் விளைவுகளையும் காணத் தவறுவதால், அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுகிறது. ஷாப்பிங்கிற்கு அடிமையாவதில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை, மேலும் இது மதம், இனம், நாடு, என அனைத்தையும் கடந்த பரவலான கோளாறாக உள்ளது. இந்த ஷாப்பிங்கிற்கு அடிமையாகும் பழக்கம் நம்மை விழுங்கும் முன்னர் சரியான நேரத்தில் அதைக் கண்டறிந்து முறையான சோதனைகள் செய்து இந்த பழக்கத்தைக் கைவிட முயற்சிக்க வேண்டும்.

ஷாப்பிங்கிற்கு அடிமையானால்...

ஷாப்பிங்கிற்கு அடிமையானால்...

ஷாப்பிங்கிற்கு அடிமையாவதால் மன ரீதியாக, பண ரீதியாக மற்றும் உடல் ரீதியாக என பல்வேறு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு வாழ்க்கை நரகமாகி விடுகிறது. குறைவான சுய மதிப்பீடு, குற்ற உணர்வு, தலையை அழுத்தும் கடன் சுமை, மற்றும் தொடர்ச்சியான பயம் ஆகியவையே ஷாப்பிங்கிற்கு அடிமையானால் ஏற்படும் மன ரீதியான தாக்குதல்களாகும்.

பணச் சுமை

பணச் சுமை

அளவுக்கு அதிகமாக செலவு செய்ததல் ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்கள் எப்பொழுதும் பணச்சுமையுடனேயே இருப்பார்கள். பல நேரங்களில், இவ்வகையிலான கோளாறுகள் உள்ளவர்களின் உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதையும் காண முடிகிறது.

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையா?

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையா?

உங்கள் வீட்டிலுள்ள பொருட்களில் பலவற்றை இன்னும் திறக்காமல் வைத்துள்ளீர்களா? உங்களுக்கு தேவையில்லாத அல்லது நீங்கள் வாங்க நினைக்காத பொருட்களை எல்லாம் அடிக்கடி வாங்கி வைத்துள்ளீர்களா? உங்களிடம் உள்ள வெறுப்பு அல்லது மன அழுத்தத்திற்கு வடிகாலாக ஷாப்பிங் செல்வீர்களா? ஷாப்பிங் செய்வதால் நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிமிருந்து ஷாப்பிங் பழக்கத்தை மறைத்துள்ளீர்களா? ஷாப்பிங் செய்யாத நாட்கள் போரடிப்பதாக தோன்றுகிறதா? இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் 'ஆம்' என்றால் தாக்குதல் தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இதிலிருந்து விடுபட வழிகள்!!

இதிலிருந்து விடுபட வழிகள்!!

இந்த கொடிய பழக்கங்களிலிருந்து உங்களை விடுபடச் செய்யும் வழிமுறைகள். இவற்றைப் படித்து பின்பற்றி பழக்கங்களை மாற்றிக் கொண்டு சேமிப்பின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இது தான் முதல் படி...

இது தான் முதல் படி...

உங்களிடம் பிரச்சனை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வது தான் முதல் படி, அதை பின்னரே அதை சரி செய்ய எடுக்க வேண்டிய முயற்சியில் இறங்க வேண்டும்.

நானும் ஒரு ஷாப்பஹாலிக் என்று ஏற்றுக் கொண்டாலே போதும், அந்த பிரச்னைக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொண்டு, தீர்க்கும் வழிமுறைகளையும் உருவாக்கி விட முடியும்.

நேரத்தை உரிய முறையில் செலவிடுங்கள்

நேரத்தை உரிய முறையில் செலவிடுங்கள்

உங்களுடைய பொழுதுபோக்குக்காக புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளுதல், புத்தகம் படித்தல், பாட்டு கேட்பது அல்லது ஜாகிங் செய்தல் போன்ற எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கவனத்தை திருப்புவதன் மூலம் ஷாப்பிங் செய்வதை குறைக்க முடியும்.

தூண்டுதலை கண்டறியுங்கள்

தூண்டுதலை கண்டறியுங்கள்

உங்களை ஷாப்பிங் செய்யத் தூண்டி, மால்களுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் செல்லத் தூண்டும் விஷயம் எது என்பதை கண்டறியுங்கள் - உங்கள் துணையுடனான வாதமாகவோ, வேலை செய்யும் இடத்தைப் பற்றிய வெறுப்போ அல்லது தனிமையோ என எது வேண்டுமானலும் இதற்கு காணரமாக இருக்கலாம். இத்தகைய சூழல்களில் ஷாப்பிங் செய்யும் எண்ணம் வந்தால் மனதைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, வேறு ஏதாவது ஆரோக்கியமான செயல்பாடுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஆசையை துறந்து விடுங்கள்

ஆசையை துறந்து விடுங்கள்

புத்தரும், பட்டினத்தாரும் குறிப்பிட்ட விஷயம் தான் இது. நீங்கள் எங்கெல்லாம் பணத்தை செலவு செய்வீர்களோ அங்கிருந்து விலகி இருங்கள். மால்கள், கடைகள் அல்லது ஷோரூம்களுக்கு செல்லாதீர்கள். நீங்கள் இணைய வழியில் ஷாப்பிங் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அந்த இணைய தளங்களுக்கு செல்லாதீர்கள் மற்றும் முடிந்த வரையிலும் இணைய தொடர்பு இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

பணத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள்

பணத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள்

உங்களுடைய கிரெடிட் கார்டை உடனடியாக இரத்து செய்து விடுங்கள். ஷாப்பிங் செய்ய செக் புக் அல்லது டெபிட் கார்டுகளையும் பயன்படுத்த வேண்டாம். இது உங்களுக்கு வசதிக் குறைவாக தோன்றுகிறதா? நீங்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க விரும்பினால் இந்த தியாகங்களை செய்வது அவசியம். உங்களுடைய பட்டியலில் உள்ள பொருட்களை வாங்கத் தேவையான பணத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள். இதன் மூலம் பொருட்களை வாங்கும் ஆசை சற்று குறையும்.

வரவு, செலவு கணக்கு..

வரவு, செலவு கணக்கு..

பொதுவாகவே ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கவனிக்க மாட்டார்கள். அவர்கள் எந்தவித கணக்கும் இன்றி செலவு செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயையும் ஒருமுறை கவனிக்கத் தொடங்கி விட்டால் போதும் - அதில் உங்களுக்கு தோன்றும் சில விஷயங்களை நீங்களாகவே குறைத்துக் கொள்வீர்கள்.

உதவி கேட்க தயக்கம் வேண்டாம்..

உதவி கேட்க தயக்கம் வேண்டாம்..

நீங்கள் தனியாக இருந்து கொண்டே ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறி வருவது சற்றே கடினமான செயலாகும். இதற்காக உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவிகளையும் நீங்கள் கேட்கலாம். இதற்காக ஒரு ஆலோசகரிடம் கலந்து பேசி, உதவிக்கான குழுக்களை உருவாக்கவும் முடியும். இந்த பிரச்னை மிகவும் பெரியதாக இருந்தால் 'மன ரீதியான சிகிச்சை (Psychotherapy)' எடுத்துக் கொள்ளவும் தயங்க வேண்டாம்.

ஒரே எண்ணம் தான்!!

ஒரே எண்ணம் தான்!!

இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய அளவுக்கு அதிகமான ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், நிறுத்தவும் முடியும். ஆனால் இதை செய்வதை விட சொல்வது மிகவும் எளிது. உங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்த பிரச்சனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

சுதந்திரம்..

சுதந்திரம்..

ஷாப்பிங் அடிமைப் பழகத்திலிருந்து விடுபட்ட பின்னர் நீங்கள் மாறுபட்ட மனிதராக இருப்பீர்கள். சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.

வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள்!!

நாளடைவில் பண ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் உண்மையிலேயே நிதி நிலையை நல்ல நிலைக்கு கொண்டு வர விரும்பினால் உடனடியாக முயற்சியில் இறங்க வேண்டும். உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

குட்ரிட்டன்ஸ் சேவைகள்..

குட்ரிட்டன்ஸ் சேவைகள்..

தங்கம் விலை நிலவரம் | வங்கி விடுமுறை நாட்கள் | டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 steps to become financially healthy by overcoming shopping addiction

All of us sometimes buy on impulse - that pair of shoes beckoning from behind the display case or new goggles that will add to your fashion statement. Problems arise when the purchases shift from impulsive to compulsive.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X