முகப்பு  »  வங்கி  »  IFSC குறியீடு

இந்தியாவில் உள்ள வங்கிகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளை தேடுக

வங்கியின் IFSC குறியீட்டை தமிழ் குட்ரிட்டனஸ் தளத்தில் தேடுவது எப்படி?

நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது வங்கியின் பெயர் மற்றும் வங்கிக் கிளையின் விபரம் மட்டுமே. மேலே கொடுக்கப்பட்டுள்ள பெட்டகத்தில் வங்கி மற்றும் கிளை விபரங்களை ட்ராப் டவுன் பட்டியலில் தேர்வுசெய்தால் போதும். குறித்த வங்கி கிளையின் IFSC குறியீட்டை நொடிப் பொழுதில் பெற்று விடலாம். நீங்கள் Bank IFSC & MICR Codes கொண்டு வங்கியின் விபரங்களையும் பெறலாம்.

இந்தியாவில் புகழ்பெற்ற வங்கிகளின் IFSC குறியீடுகள்

இந்தியாவின் முக்கிய வங்கிகளின் IFSC குறியீடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

IFSC குறியீடு என்றால் என்ன?

IFSC Code என்பது எண்களும் எழுத்துக்களும் ஒன்றாக இருக்கும் ஒரு குறியீடு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கிளையும் அடையாளம் காட்டும் விதமாக ரிசர்வ் வங்கி IFSC Code உருவாக்கியுள்ளது. இணைய வழி பரிமாற்றத்தில் (ECS), NEFT or RTGS போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது இந்த IFSC குறியீடு மிகவும் அவசியம். இக்குறியீட்டின் மூலம் இந்தியாவில் எந்த ஒரு வங்கிக் கிளைகளுக்கும் குழப்பம் இல்லாமல் எளிமையாக இணையம் வழியாகப் பண பரிமாற்றம் செய்ய முடியும்.

மேலும் படிக்க.. IFSC குறியீட்டின் முக்கியத்துவம்.

IFSC குறியீடு எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

IFSC குறியீட்டைப் பயன்படுத்து National Electronic Fund Transfer (NEFT) and Real Time Gross Settlement (RTGS) பரிமாற்றங்களை எளிமையாகச் செய்ய முடியும். இத்தகைய முறையைப் பயன்படுத்திக் காசோலை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் சில நொடிகளில் உங்களது பணப் பரிமாற்றத்தை செய்துகொள்ள முடியும். மேலே உள்ள பெட்டகத்தில் IFSC குறியீட்டை நீங்கள் தெரிந்துகொள்வதன் மூலம் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று கணக்காளரின் பெயர் மற்றும் கிளையின் IFSC குறியீட்டைக் கொண்டு சில நிமிடங்களில் பணத்தைப் பரிமாற்றம் செய்யப்படும். இதே முறையை இணைய வழி பரிமாற்றத்திலும் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க.. IFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்.

MICR குறியீடு என்றால் என்ன?

MICR code என்பது Magnetic Ink Character Recognition-இன் சுருக்கம் தான், இதை நீங்கள் வங்கிக் காசோலைகளில் பார்க்கலாம்.MICR code மூலம் உங்களின் காசோலை பரிமாற்றத்தை வேகமாகச் செயல்படுத்த முடியும். ஒவ்வொரு வங்கிக் கிளையும் பிரத்தியேமான MICR code வைத்திருக்கும். இதனால் வங்கிக் கிளையை எளிமையாகக் கண்டுபிடித்துப் பரிமாற்றத்தை விரைவுபடுத்த முடியும்.

மேலும் படிக்க.. IFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்.

NEFT (National Electronic Fund Transfer system) என்றால் என்ன?

National Electronic Fund Transfer என்பதை வங்கி வட்டார மொழிகளில் NEFT என்று அழைக்கப்படும். வங்கிப் பணப் பரிமாற்றத்தில் காசோலை பயன்பாட்டைக் குறைக்கவும், பரிமாற்றத்தை நொடிப்பொழுதில் முடிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த NEFT முறை. இது முற்றிலும் இண்டர்நெட் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்த IFSC code மிகவும் அவசியமான ஒன்று. இயல்பாகக் குறைவான தொகை அனைத்தும் NEFT வழியாகவும், அதிகப்படியான தொகை அனைத்தும் RTGS வழியாகவும் செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க.. RTGS, NEFT மற்றும் IMPS குறியீடுகளின் வித்தியாசம் .

RTGS (Real -Time Gross Settlement) என்றால் என்ன?

NEFT முறையை போலவே தான் Real -Time Gross Settlement (RTGS) பரிமாற்ற முறையும் இணைய வாயிலாக செயல்படுகிறது. ஆயினும் இது வேகமாக செயல்படக்கூடியது. இதில் பரிமாற்றத் தொகையும் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க.. RTGS பற்றி மேற்படி விபரங்கள் .

IMPS (Immediate Payment Service) என்றால் என்ன?

Immediate Payment Service பணப் பரிமாற்ற முறை மிகவும் எளிமையான மற்றும் வேகமானது. இதில் பயனாளியின் கணக்கு விபரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் உள் வங்கி கணக்குகளுக்கு நீங்கள் பணத்தைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க.. IMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி? .

How Can You Find the IFSC Code Using the Goodreturns.in?

All you need to do is know the name of your bank and branch.

Just use the box to enter the bank name and select the branch accordingly. The drop down list will then help you find the correct IFSC Code of your bank branch. You can also get the complete details of all the branch by entering Bank IFSC & MICR Codes.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X