இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி சேவை நிறுவனமாக ஹெச்டிஎஃப்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இயங்கிவந்த அதானு சக்ரபர்த்தி திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் Part time chairman மற்றும் independent directorஆகவும் பதவி வகித்து வந்தவர் தான் அதானு சக்ரபர்த்தி. இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மார்ச் 15ஆம் தேதி ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கும் சக்ரபர்த்தி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்தது வங்கியின் கடன் வழங்கும் பிரிவினை வளர்ச்சி அடைய செய்து இந்தியாவின் இரண்டாவது பெரிய கடன் வழங்குநராக மாற்றியது என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

இவர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனத்தில் தான் கவனித்த சில நிகழ்வுகள் தன்னுடைய தனிப்பட்ட நெறிமுறைகள் உடன் ஒத்துப் போகவில்லை என்றும், உடனடியாக பதவி விலகுவதற்கான தன்னுடைய முடிவுக்கு அதுவே அடிப்படை காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். வேறு எந்த ஒரு முக்கிய காரணங்களும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
முன்னதாக தன்னுடைய பதவிக்காலத்தில் வங்கி வாரிய உறுப்பினர்களும், நிர்வாக அதிகாரிகளும் தனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை அளித்ததாக கூறியுள்ள அவர் மிடில் மற்றும் ஜூனியர் லெவல் ஊழியர்கள் சிறந்த எனர்ஜியோடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தனர் என்றும் கூறி பாராட்டியுள்ளார்.

இதனை அடுத்து ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதானு சக்ரபர்த்தியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது என்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதலின்படி இன்று முதல் கேகி மிஸ்திரி இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்கு இவர் இந்த பொறுப்பை வகிப்பார் என கூறியிருக்கிறது.
அதானு சக்ரபர்த்தி குஜராத் கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் முன்பு மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு துறை செயலாளராக பதவி வகித்து நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். நிதித்துறை, துறைமுகம், தொழில்துறை ,பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை , தொழிலாளர் நலத்துறை, உள்துறை என பல்வேறு துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்தவர்.
இவர் 2021ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அவர் திடீரென பதவியை ராஜினாமா செய்திருப்பதும் தனிப்பட்ட நெறிமுறைகளோடு ஒத்து போகவில்லை என காரணம் கூறியிருப்பதும் நிறுவன செயல்பாடுகள் மீது கேள்விகளை எழ வைத்துள்ளது.
HDFC வங்கியின் முன்னாள் தலைவர் அதானு சக்ரபர்த்தியின் விலகல் குறித்து முக்கிய தகவலை சிஎன்பிசி வெளியாகியுள்ளது. இவருடைய பதவி விலகல் வங்கியின் செயல்பாடு, விதிமுறை மீறல் அல்லது RBI (இந்திய ரிசர்வ் வங்கி) தொடர்பான விஷயங்கள் போன்றவற்றால் ஏற்படவில்லை. அதானு சக்ரபர்த்தி பதவி-க்கு புதிய நபரை தேர்வு செய்யும் அனைத்து கட்டத்திலும் RBI-க்கு முறையாக வங்கி நிர்லாகம் தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கெகி மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாக குறைபாடுகள், NPA பிரச்சனை அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்ற எந்த காரணமும் இந்த விலகலுக்குக் காரணமாக இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானு சக்ரபோர்ட்டி non-executive பதவியில் இருந்தபோதும் executive முறையில் செயல்பட்டது மேலாண்மை குழுவுடன் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கருத்து வேறுபாடுகள் சில காலமாக இருந்தாலும், அவரது ராஜினாமா திடீரென நடந்ததால் இயக்குநர் குழுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அவசர கூட்டம் கூட்டப்பட்டு, நிலைமையை உறுதி செய்ய இடைக்காலமாக கெகி மிஸ்ட்ரி பொறுப்பேற்கச் செய்யப்பட்டுள்ளார்.
இதன் எதிரொலியாக இன்று ஹெச்டிஎப்சி வங்கி வங்கி பங்குகள் சுமார் 5.5 சதவீதம் சரிந்து 770 ரூபாய் வரையில் சரிந்தது.
திடீரென பதவியை ராஜினாமா செய்திருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் நிர்வாகம் இடைக்கால தலைவரை நியமனம் செய்துவிட்டது என்பதால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications