தங்கம் விலை உயர உயர தங்கம் சார்ந்து நடக்கும் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் நடை பெற்று வருகிறது. இதேபோல் தங்கம் தற்போது நிதி சந்தையில் முக்கிய சொத்தாக மாறியிருக்கும் வேளையில் இந்தியா முழுக்க இருக்கும் மக்கள் தங்கம், வெள்ளியை வைத்து கடன் வாங்க அதிகப்படியான ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை உணர்ந்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (Micro and Small Enterprises) கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இந்த விதிகள் சிறு கடைகள், பட்டறைகள், வர்த்தகர்கள், சேவை வழங்குபவர்கள், சிறிய உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ள மக்களுக்கு பெரும் உதவியாக அமையும். இதன் மூலம் சிறு வணிகர்கள் வங்கிகளிடம் பயப்படாமல், எளிதாக கடன் பெற முடியும்.
ரூ.20 லட்சம் வரையிலான வணிக கடன்களுக்கு, கடன் வாங்குபவர் தானாக முன்வந்து தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பாக (collateral) வழங்கினால் அதை ஏற்றுக்கொண்டு வங்கிகளுக்கு கடன் வழங்கலாம் என்று ஆர்பிஐ இப்போது தெளிவான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்பு இது குறித்து வங்கிகளுக்கு சந்தேகம் இருந்த நிலையில் தற்போது ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. இதுக்குறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் தங்கம், வெள்ளியை பிணையமாக வைத்துக்கொண்டு கடன் வழங்குவதை அனுமதிக்கப்படுகிறது, இது விதிமீறல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இது வங்கி நிர்வாகம் கடன் வாங்குபவர்களிடம் இதை கட்டாயப்படுத்தி தங்கம், வெள்ளியை வாங்க கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.
ரூ.20 லட்சம் வரை கடன்
மத்திய அரசு பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் (PMEGP) கீழ் வரும் தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த பாதுகாப்பும் (சொத்து, தங்கம், வைப்பு நிதி போன்றவை) கேட்காமல் வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ கட்டாயமாக்கியுள்ளது. இது அனைத்து சிறு மற்றும் குறு தொழில்களுக்கும் (MSEs) இந்த சலுகை உண்டு.
ரூ.25 லட்சம் வரை உயர்த்தும் வாய்ப்பு
PMEGP திட்டத்தின் கீழ் கடனை வாங்கிய நிறுவனங்கள், அக்கடனை நல்ல முறையில் திருப்பிச் செலுத்தும் வரலாறு (repayment history) மற்றும் வலுவான நிதி நிலை (financial performance) உள்ள தொழில்களை வைத்திருந்தால், வங்கிகள் தங்கள் உள் விதிகளின்படி பாதுகாப்பு இல்லா கடன் வரம்பை ரூ.25 லட்சம் வரை உயர்த்தலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
எப்போது இருந்து இந்த விதிகள் அமலுக்கு வரும்?
புதிய வழிகாட்டுதல்கள் அனைத்து புதிய கடன்களுக்கும், புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும். இவை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இதனால் MSE நிறுவன உரிமையாளர்கள் வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தாலும், கையில் இருக்கும் தங்கம், வெள்ளியை வைத்து PMEGP திட்டத்தின் கீழ் கடனை குறைந்த வட்டியில் பெற முடியும்.
வங்கிகள் எப்படி ஆபத்தை கட்டுப்படுத்துகின்றன?
பாதுகாப்பு இல்லா கடன்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, கடன் உத்தரவாத திட்டம் (Credit Guarantee Scheme) மூலம் அரசு தனது இழப்பை சரி செய்யும். இதனால் வங்கிகளுக்கு பாதுகாப்பு உண்டு, இதன் மூலம் சிறு தொழில்களுக்கு கடன் கிடைப்பது எளிதாகிறது.
ஏன் இந்த புதிய விதிகள்?
சிறு மற்றும் குறு தொழில்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் அளவு வேகமாக வளர்ந்து வருகிறது. 2025 டிசம்பர் நிலவரப்படி, இத்தகைய தொழில்களுக்கு வங்கிகள் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன-இது முந்தைய ஆண்டை விட 30% அதிகம்.
இந்தியா தற்போது உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு இத்தகைய கடன் அளிப்பது மூலம் MSME நிறுவனங்களுக்கு போதுமான நிதி ஆதாரம் கிடைத்து வேகமாக வளர்ச்சி அடையும். மேலும் MSME நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் பெரிய நிறுவனங்களுக்கு போதுமான உரிபாகங்கள், சேவைகள் உறுதி செய்யப்படும்.
இந்த புதிய விதிகள் சிறு வியாபாரிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. பாதுகாப்பு இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும் என்பது பலருக்கு புதிய தொழில் தொடங்கவோ அல்லது விரிவாக்கவோ உதவும். இப்படி கடன் பெற முடியாதவர்களுக்கு கையில் இருக்கும் தங்கம், வெள்ளியை பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications