மந்தமான விற்பனையால் தங்கம் விலை சரிவு...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் தலைநகரான டில்லியில், தங்க விற்பனையாளர்களின் மந்தமான சந்தையின் மத்தியில் சவரனுக்கு 80 ரூபாய் வரை குறைந்து ரூபாய் 29,970-க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று சந்தை விடுமுறையின் காரணமாக இன்று அதே விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தொழிலக மற்றும் நாணயம் செய்வோரிடம் இருந்து வந்த ஆதரவு குறைந்ததால் வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 200 ரூபாய் வரை குறைந்து 44,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மந்தமான விற்பனையால் தங்கம் விலை சரிவு...

மும்பையில் 99.9 மற்றும் 99.5 சதவிகித தூய்மையான தங்க மதிப்பு ரூபாய் 55 வரை குறைந்து ரூ. 29,880 மற்றும் ரூ. 29,730 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி மதிப்பு 400 ரூபாய் வரை குறைந்து கிலோவிற்கு 45,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது.

உள்நாட்டு சந்தைகளில் 99.9 மற்றும் 99.5 சதவிகித தூய்மையுடைய தங்க மதிப்பு ரூபாய் 80 வரை சரிந்து 10 கிராமிற்கு 29,970 மற்றும் 29,770 என்ற அளவில் இருந்தது.

இதே போன்று வெள்ளி உடனடி விலையில் கிலோவிற்கு 200 ரூபாய் சரிந்து 44,600-க்கும் வார இறுதி விற்பனையில் 300 ரூபாய் குறைந்து ரூபாய் 44,500-க்கும் விற்கப்பட்டது.

எனினும் வெள்ளி நாணயங்கள் 100 எண்ணிக்கைகளுக்கு இறுதியாக வாங்கும் விலை 85000 ஆகவும் விற்பனை விலை 86000 என்ற அளவிலும் தொடர்ந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold falls by Rs. 80 to Rs. 29,970 on sluggish demand

Gold prices fell by Rs. 80 to Rs. 29,970 per 10 grams in the national capital on Friday on stockists selling against sluggish demand at prevailing higher levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X