சென்னை: இந்த வருடம் துவக்கம் முதல் இந்திய பொருளாதாரம் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. 2014ஆம் ஆண்டின் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து சுமார் 26.75 பில்லியன் டாலர் எட்டியது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 9.92 பில்லியன் டாலராக குறைந்தது. கடந்த மாதம் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு அகியவற்றுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி உயர்த்தியது வர்த்தக பற்றாக்குறை வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
2013ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி மாதத்திற்கான ஏற்றுமதி கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 5.71 சதவீதம் அதிகரித்து 257.09 பில்லயன் டாலரை எட்டியது குறிப்பிடதக்கது.

வர்த்தக செயலர் ராஜீவ் கீர் இது பற்றி கூறுகையில் "இந்திய பொருளாதாரம் இதேபோல் தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டு (மார்ச் மாதம்) முடியும் தருவாயில் ஏற்றிமதி இலக்கான 325 பில்லியன் இலக்கை அடையலாம்" என அவர் தெரிவித்தார்.
ஆனால் இறக்குமதி ஜனவரி மாதத்தில் 18.07 சதவீதம் குறைந்து 36.67 பில்லியன் டாலரை தொட்டது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய தீய சக்தியாக விளங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் அதிகப்படியான இறக்குமதி 77 சதவீதம் குறைந்து 1.72 பில்லியன் டாலரை எட்டியது. இது டிசம்பர் மாதம் 7.49 பில்லியன் டாலராக இருந்தது.


Click it and Unblock the Notifications