டெல்லி: இன்று, கிட்டத்தட்ட அனைத்து வேளைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக தத்தம் தொழில்துறைகளில் பெரும் சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்த செய்தி ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட வேண்டிய விஷயம் ஆனால், பெண்கள் அவர்களின் பணியிடங்களில் நிஜமாகவே பாதுகாப்பாக இருக்கிறார்களா? இது வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இந்தியப் பெண்களின் மனதில் அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி. (இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று..)
நிச்சயமாக, நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியப் பகுதிகள் தான் பெண்களுக்கான பணியிடங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதாக டிஎன்என்-ஐச் சேர்ந்த சேத்தன் குமார் கூறுகிறார்.
115 புகார்கள்
2010 ஜனவரி மற்றும் 2013 டிசம்பர் ஆகியவற்றுக்கு இடையிலான காலகட்டத்தில் பெண்களுக்கான தேசிய கமிஷன் (என்சிடபிள்யு), ஒவ்வொரு வருடமும் பணியிடத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து சுமார் 115 புகார்களை பதிவு செய்துள்ளது. இவற்றுள், நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் தான் குறைவான புகார்கள் பதிவாகியுள்ளன.
காவல் துறை
இந்த நான்கு ஆண்டு கால அவகாசத்திற்குள், மாநிலம் எங்கும் மொத்தம் 457 புகார்கள் இந்த கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "காவல்துறையை நேரடியாக சிலர் அணுகினாலும், பல பேர் இது குறித்து குரல் உயர்த்தாது மௌனம் காக்கின்றனர்," என்று ஒர் அதிகாரி ஆதங்கப்பட்டதாக டிஎன்என் தெரிவித்துள்ளது.
நடுத்தர-நிலை ஊழியர்கள்
நடுத்தர-நிலை ஊழியர்களிடமிருந்தே பெரும்பாலான புகார்கள் எழுந்துள்ளன, என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல் இடத்தில் தலைரநகரம்!!
இந்தியத் தலைநகரமான டெல்லியில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்களால் அதன் புகழ் மங்கி வரும் இவ்வேளையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்களிடமிருந்து இதுவரை சுமார் 99 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம்
டெல்லியை தொடர்ந்து சுமார் 118 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இந்நகரம் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications