துபாய் மண்ணில் குவியும் இந்திய நகை கடைகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: நடப்பு கணக்கு பாற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு சமீபத்தில் தங்க கட்டிகளின் இறக்குமதிகளுக்கான சட்ட திட்டங்களில் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான இந்திய நகை கடைகள் வளைகுடா சந்தையில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கிவிட்டனர்.

 

இந்தியாவின் முன்னணி தொடர் நகை கடைகளான கல்யாண் ஜுவல்லரி, சமீபத்தில் சுமார் 6 கிளைகளுடன் வளைகுடா சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

மலபார் கோல்டு

மலபார் கோல்டு

"கூடிய விரைவில் இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் உள்ளிட்ட சில முன்னணி தொடர் ஜுவல்லரி நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை வளைகுடா பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக வதந்தி நிலவுகிறது," என்று மலபார் கோல்டு அண்ட் டைமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாம்லால் அஹமத் தெரிவித்ததாக கல்ஃப் நியூஸ் கூறியுள்ளது.

20% ஏற்றுமதி

20% ஏற்றுமதி

இந்தியாவில் தங்க கட்டிகள் வாங்கப்படுவதில் சுமார் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்தாக வேண்டும் என்ற விதிப்படி நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்றுமதியை அடைய வெளிநாட்டு சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் இறங்குவதே சரியான முடிவாகும்.

வளைகுடா சந்தை

வளைகுடா சந்தை

இத்தகைய ஏற்றுமதி இலக்கை அடைய, இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய அவர்களுக்கு ஏதுவாக இருக்கக்கூடிய சந்தைகள் அரபு நாடுகளும் மற்றும் வளைகுடா பகுதிகள் மட்டுமே என்று அஹமத் கூறியுள்ளார்.

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில்
 

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில்

துபாயைச் சேர்ந்த ஜுவல்லரி ரீடெயிலர்களுக்கு இவ்வருடம் நல்ல துவக்கமாக அமைந்தது என்றே சொல்லலாம். இவர்கள் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் (டிஎஸ்எஃப்) கலந்து கொண்சு சுமார் 7 டன் தங்கத்தை விற்று உள்ளனர். ஒரு அவுன்ஸ் சுமார் 1,250 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்த தங்கத்தின் விலை இவர்களுக்கு பெருமளவில் கைகொடுத்ததாலும் இது சாத்தியமாகியுள்ளது.

விழாவிற்கு பின் மந்தமான விற்பனை..

விழாவிற்கு பின் மந்தமான விற்பனை..

ஸ்கை ஜுவல்லரியைச் சேர்ந்த ஸிரியாக் வர்கீஸ், டிஎஸ்எஃப் முடிந்த பின்னான காலகட்டத்தின் போது விற்பனை குறைவது காலங்காலமாக நடந்து வருவதே என்று கூறியிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More Indian jewellers to open shops in Dubai

More Indian jewellery chains are likely to launch their operations in the Gulf market following a recent change by India in its regulations governing bullion imports, according to a media report. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X