இந்திய தங்க வர்த்தக சங்கம் மார்ச் 10 ஆம் தேதி வேலை நிறுத்தம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பெருகிவரும் நடப்புக்கணக்குப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவர அரசு வகுத்துள்ள வர்த்தகக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை எதிர்த்து இந்திய தங்க வர்த்தக சங்கம் அல்லது பில்லியன் அசோசியேஷன் மார்ச் 10ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அந்த அமைப்பு தெரிவித்துள்ள 10 நிபந்தனைகளில் அடங்கிய பட்டியலை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

20:80 ஏற்றுமதி திட்டம்!!

20:80 ஏற்றுமதி திட்டம்!!

இந்த பட்டியலில் முதன்மையாக ஏற்கனவே இறக்குமதி செய்த தங்க அளவில் 20 சதவிகிதத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற 20:80 விகித கட்டுப்பாட்டை உடனடியாக நீக்கவேண்டும் என்பதாகும்.

உள்ளநாட்டு சந்தை

உள்ளநாட்டு சந்தை

அரசின் இந்த கட்டுப்பாடு, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்திற்கு கடும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதோடு, தங்க வர்த்தகர்களின் முன்பதிவு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தங்கக் கட்டிகள் கடத்தல்

தங்கக் கட்டிகள் கடத்தல்

அரசு தங்கக் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்க இறக்குமதி மீதான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

துன்புறுத்தல்
 

துன்புறுத்தல்

இறக்குமதியின் போது அரசு அதிகாரிகளால் தங்கம் பறிமுதல் செய்யப்படுவதும் இறக்குமதி செய்வோர் துன்புறுத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bullion association calls for trade bandh on March 10

The Indian Bullion Association has called for an all-India bullion trade bandh on March 10 to protest against various trade restrictive policies rolled out by the Government to meet the widening current account deficit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X