சென்னை: தங்கம் மீதான வர்த்தகம், ஆர்வம் இந்தியாவில் எந்த நாளும் குறைந்ததில்லை என்றே சொல்லலாம். அதேபோல் தங்கம் வாங்காத மக்களும் தங்கத்தின் விலையை அறிய தினமும் ஆர்வமுடன் பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் தங்கத்தின் விலை நிலை என்ன என்பது தான் வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் சூடான விவாதம். வருங்கள் நாமும் அதில் கலந்துக்கொள்வோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் தங்கத்தின் விலை உயர அதிகளவில் வாய்ப்புள்ளதாக ஒரு முக்கிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கம், நடப்பு கணக்கு பாற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகளை களைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல முயற்சிகள் எடுத்து வந்தது, வருகிறது.
10கி தங்கம் ரூ.32,000 உயர்வு
இந்தியாவின் முன்னனி தொழில்துறை அமைப்பான அசோசாம் நிறுவனம் தேர்தலுக்குப் பின்னான தங்கம் விலை குறித்து சில முக்கிய ஆய்வு நடத்தியதில் சில பளிச்சிடும் கருத்துகள் வெளிவந்தது. மத்தியில் பெரும்பான்மை இல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் இந்தியாவில் 10 கிராம் தங்கம் 32,000 ரூபாய்க்கு மேல் உயரும் என இந்த அய்வறிக்கை தெரிவிக்கிறது.
புதிய அரசின் கையில் தான் உள்ளது
மத்தியில் அமையப்போகும் ஆட்சியை பொருத்தும், அவர்கள் தங்கத்தில் மீது அளிக்கப்படும் முக்கியதுவத்தை பொருத்தே தங்கம் விலை மாறம் என அந்த அமைப்பு தெரிவிக்கிறது. பொதுவாக சீன பொருளாதாரம் மற்றும் அமெரிக்க பொருளாதார மீட்சி அகியவையே தங்கம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் கூட்டுகிறது.
இந்நிய சீனா இடையே போட்டி
மேலும் இந்தியா, சீனா இடைய பல மறைமுக மற்றும் வெளிபடையாக பல பிரச்சனைகள் இருந்தலும், தங்கம் யார் அதிகளவில் இருப்பு வைத்திருப்பது என்ற போட்டி மிகவும் வெளிப்படையாக நடக்கிறது. தற்போதைய நிலவரத்தின் படி தங்க இருப்பில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
தங்கத்தில் ஏற்றம்
தங்கம் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடனே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது எது என்றால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில் விலை மாறுப்படும் அதேபோல் தங்கம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுதும் விலையில் ஏற்றம் இருக்கும். மேலும் பங்குசந்தையில் எப்பொழுது அதிகளவில் சரிவு ஏறப்படுகிறதோ அப்போது தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யப்படும்.
சீனா மற்றும் அமெரிக்க பொருளாதாரம்
மேலும் இந்தியாவில் நிலையான மத்திய அரசு அமைந்தாலும், சீன பொருளாதாரத்தில் சரிவு மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படாவிட்டால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டுதான் இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications