சென்னை: இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 2ரூபாய் உயர்ந்துள்ளது. பங்கு சந்தையில் தங்கம் 79 புள்ளிகள் சரிந்து 30,130 ரூபாய் எந்ற நிலையில் விற்கப்படுகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தை பார்க்கும்போது ரூபாயின் மதிப்பு கடந்த 8 அளவில் உயர்ந்துள்ளது. இன்று 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.09ஆக உள்ளது.
மேலும் தங்க இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை குறைக்க மத்திய அரசு நிதியமைச்சகத்துடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை தங்க இறக்குமதிக்கு சாதகமாக அமைந்தால் தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2ரூபாய் குறைந்து 2849.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 2ரூபாய் குறைந்து 3044.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,440
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,420
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,460
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,400
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,490
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,420


Click it and Unblock the Notifications