மும்பை: தங்கக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள என்பிஎஃப்ஸி நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனம், ஜெய்பீ ஹோட்டல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திடமிருந்து மைல்ஸ்டோன் ஹோம் ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை சொல்லப்படாத தொகைக்கு வாங்கியதன் மூலம் இப்போது வீட்டுக்கடன் துறையிலும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது.
மணப்புரம், தங்கக்கடன் மற்றும் வீட்டுக்கடன் ஆகிய இரண்டுக்கும் இடையில் நிலவி வரும் சிறப்பான ஸினர்ஜியின் காரணமாக நிகழ்ந்த இயற்கையான முன்னேற்றமாகவே இந்நிறுவனம் கருதுகிறது.

பங்குச் சந்தைகளுடனான அந்நிறுவன அறிக்கையில், ஜெய்பீ ஹோட்டல்ஸிடமிருந்து மைல்ஸ்டோன் ஹோம் ஃபைனான்ஸை வாங்குவது தொடர்பான உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதற்கு தேவையான ஒப்புதல்களைப் பெற்றுவிட்ட்தாகவும் எம்எஃப்எல் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கடன் துறையில் நுழைவதன் மூலம் தன் வணிகத்தை பல்வகைப்படுத்த மணப்புரம் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது. எம்எஃப்எல் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவாகிய வி.பி.நந்தகுமார் கூறுகையில், இந்த முயற்சி "பங்குதாரர்களின் மதிப்பை குறிப்பிடத்தக்க அளவு கூட்டுவதாக" இருக்கும் என்று தான் உணர்வதாகவும் கூறியுள்ளார்.
எம்எஃப்எல் நிறுவனத்தின் ஈடி மற்றும் துணை சிஇஓவான ஐ .உன்னிகிருஷ்ணன் சுமார் 1.5 மில்லியனுக்கும் மேலான பான்-இந்தியா கஸ்டமர் பேஸைக் கொண்டிருக்கும் நிறுவனமான எம்எஃப்எல், சுமார் 19 சதவீத கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதத்துடன் திகழும் வீட்டுக்கடன் துறையில் விரிவடைவதற்கான "சாதகமான இடத்தில்" இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் எம்எஃப்எல்லுக்கான பிரத்யேக நிதி ஆலோசகராகத் திகழ்கிறது. எனினும் இந்த கையகப்படுத்துகை தொடர்பான நிதி சார்ந்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எம்எஃப்எல்லின் பங்குகள் சுமார் 65 பைசா வரை உயர்ந்து பிஎஸ்இயில் சுமார் 22.65 ரூபாயை (பங்கு முக மதிப்பு சுமார் 2 ரூபாய்) எட்டியுள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications