சென்னை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 24 பைசா உயர்ந்து 60.25 ரூபாயாக உள்ளது. இதனால் இந்திய ரூபாய் 7 மாத உயர்வை அடைந்தது. குறிப்பிடதக்கது. இன்று காலை வர்த்தக துவக்கம் முதல் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் டாலரை வர்த்தகத்தில் உட்செலுத்தியதால் ரூபாய் மதிப்பு உயர்ந்ததுள்ளது.
உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட உயர்வு, ரூபாய் மதிப்பிலும் பிரதிபலித்தது. இதனால் அன்னிய நாணயங்களின் உள்ளிடு அதிகளவில் இருந்ததாக பங்கு சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் மும்பை பங்கு சந்தையில் 72.53 புள்ளிகள் உயர்ந்து 22,127.74 புள்ளிகளை அடைந்தது. இதுமட்டும் அல்லாமல் நிப்டியில் இவ்வருடத்தின் உயர்வான 6611.60 புள்ளிகள் பதிவானது.
Share This Article
English summary
Rupee hits seven month high
The rupee strengthened by 24 paise to touch a seven-month high of 60.24 against the US dollar in early trade on Wednesday on continued selling of the American currency by exporters amid sustained foreign capital inflows.
Story first published: Wednesday, March 26, 2014, 11:16 [IST]
See More On: dollar, money, sensex, nifty, stock market, export, டாலர், ரூபாய், பணம், சென்செக்ஸ், பங்கு சந்தை, ஏற்றுமதி
Other articles published on
Mar 26, 2014