மும்பை: இனி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொகைக்கு குறைவாக இருந்தால் வங்கிகள் அந்த கணக்கிற்கு அபராதம் விதிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி வங்கிகள் தனது வாடிக்கையாளர் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் அளவிற்கும் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்க கூடாது என உத்தவிட்டுள்ளது.
வாடிக்கையாளரின் கவன குறைவை வங்கிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் 2014-15ஆம் ஆண்டுக்கான நிதியியல் கொள்கையை வெளியிடுகையில் தெரிவித்தார்.
சேவைகள் ரத்து
இந்த அபராதத்திற்கு பதில், தொடர்ந்து சில மாதங்களுக்கு பேலன்ஸ் குறைவாக இருக்கும் கணக்குகளுக்கு படிப்படியாக சேவைகளை குறைத்துக்கொள்ள ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும் கணக்குகளில் வைப்பு தொகை அளவிடிற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் முழுமையான சேவையை அளிக்கவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
அபராதம்
மேலும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களின் மீது அபராதம் விதிக்க எந்த ஒரு அனுமதியும் கிடையாது என ராகுராம் ராஜன் தெரிவித்துள்ளர்.
பொது துறை வங்கிகள்
இதில் பொது துறை வங்கியான ஸ்டேட் வங்கி இத்தகைய அபராதங்கள் எது விதிப்பதில்லை என தெரிவித்துள்ளது. பொது வங்கிகளில் சில வங்கிகள் மட்டுமே இத்தகைய செயல்முறையை பின்பற்றுகிறது.
தனியார் வங்கிகள்
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற வங்கி ஒரு காலண்டிற்கு சுமார் 750 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் மீது அபாராதம் செலுத்துகிறது. இத்தகைய வங்கிகளில் நகரபுற வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தனது கணக்கில் வைத்திருக்க வேண்டும், அதேபோல் கிராமபுற அல்லது நகராட்சி பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 5,000 வரை வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் விதிமுறை வகுத்துள்ளது.
வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டம்
வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தின் படி "இனி எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளர் மீதும் அபராதம் விதிக்க முடியாது என" ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications