சென்னை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து 2810.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதே நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை 2738 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது. கடந்த ஒரு மாத காலமாக குறைந்த தங்கம் விலை தற்போது தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
உக்ரேன்-ரஷ்ய நாடுகளிடைய நிலவும் உள்கட்சி பிரச்சனைகளால் கச்சா எண்ணெய் விலை இன்று காலை வர்த்தகத்தில் உயர்ந்தது. இதனால் உலக நாடுகளில் இதன் எதிரொலி அதிகரிக்கும் என தெரிகிறது.
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 60.17 என்ற வீதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 37 ரூபாய் அதிகரித்து 3004.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 32ரூபாய் உயர்ந்து 2810.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,040
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,010
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,020
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,960
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,100
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,980


Click it and Unblock the Notifications