மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஜாப்பானின் நாட்டு மிட்சுபிஷி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய சாப்ட்வேர் நிறுவனத்தை துவங்கவுள்ளதாக இன்று தெரிவித்தது.
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் ஜப்பான் நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நிப்பான் டிசிஎஸ் சொல்யூஷன் சென்டர் மற்றும் மிட்சுபிஷி கார்ப்பரேஷனின் ஐடி பிரன்டையர் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு புதிய சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்க உள்ளதை நிறுவனங்களின் வெளியீடுகள் தெரிவித்துள்ளது.
புதிய முயற்சிகள்
இந்த நிறுவனத்தின் மூலம் ஆட்டோமொபைல் துறையில் பல விதமான புதுமைகளும், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
சேவை பறிமாற்றிம்
மிட்சுபிஷி நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் அபரிதமான தொழிற்நுட்பத்தை வளர்ச்சியை பெற்றுள்ளது, அதேபோல் டிசிஎஸ் நிறுவனம் சாப்ட்வேர் துறையின் ஜாம்பவான் என்று சொன்னால் மிகையாகது. இந்த நிறுவன இணைப்பின் மூலம் இருநிறுவனங்களும் தனது சேவையை பறிமாற்றிக்கொள்ள பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
பங்கிடு
புதிய சாப்ட்வேர் நிறுவனத்தில் டிசிஎஸ் நிறுவனம் 51 சதவீதம் பெற்றுள்ளது மிதமுள்ள 49 சதவீதத்தை மிட்சுபிஷி கார்ப்பரேஷன் கொண்டுள்ளது.
ஜூலை 2014 முதல் துவக்கம்
மேலும் இந்நிறுவனம் ஜூலை 2014ஆம் மாதம் முதல் செயல் படும் என இந்நிறுவனங்களில் வெளியிட்டிள் தெரிவித்திருந்தது.
பங்கு சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை 6.55 புள்ளிகள் உயர்ந்து 2,224.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications