ரூ.2,400 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியாவிடம் 10% தொகை கூட இல்லையாம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நோக்கிய நிறுவனத்தின் வரி ஏய்ப்பு பிரச்சனைக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் இன்று தமிழக அரசிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி பி. ராஜேந்திரன், தமிழக அரசுக்கு முதற்கட்டமாக மொத்த தொகையில் 10 சதவீதம் அதாவது ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

 

இன்று காலை தான் நோக்கியா நிறுவனத்தை பற்றி ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பார்த்தோம். பார்க்க..
இந்நிறுவனத்தின் போராத காலம் மாலை நேரத்திற்குள்ளே இந்நிறுவனத்தை பற்றி கசப்பான செய்தி வருகிறது.

வரிஏய்ப்பு

வரிஏய்ப்பு

சென்னையில் தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூரில் பகுதியில் உள்ள நோக்கிய நிறுவனத்தின் தொழிற்சாலையில் மொபைல் போன் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதில் இந்நிறுவனம் 2400 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வரி ஏய்ப்பிற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தற்போது நோக்கிய நிறுவனம் வரி ஏய்ப்பில் 10 சதவீதத்தை ஆதாவது 240 கோடி ரூபாயை தற்போசு செலுத்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

காலக்கெடு

காலக்கெடு

இந்த தொகையை அடுத்த 8 வாரங்களில் செலுத்தவும் நோக்கிய நிறுவனத்திற்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.

கெட்ட காலம்
 

கெட்ட காலம்

உண்மையில் இந்த தீர்ப்பு நோக்கியா நிறுவனத்திற்கு சதகமானது தான். ரூ.2400 கோடி வரி ஏய்ப்பில் வெறும் ரூ.240 கோடி மட்டுமே தற்போது கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதை செலுத்தினால் தொழிற்சாலையை மீண்டும் தொடரலாம். ஆனால் இதை செலுத்த நிறுவனத்திடம் பண இல்லை என்பது கொடுமை. நோக்கியா நிறுவனத்தின் வழக்கறிஞர் கூறுகையில் "நிறுவனக் கணக்கில் வெறும் 780 கோடி ரூபாய் மட்டுமே உள்ளதால், 10 சதவீத தொகை செலுத்த அதிகமான காலம் தேவை" என தெரிவித்தார்.

தொடர் பிரச்சனைகள்

தொடர் பிரச்சனைகள்

நோக்கியா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை துவங்கிய சில வருடங்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனால் நோக்கியா நிறுவனம் பெரும் லாபத்தை பெற்றது. பின்னர் நிறுவன செயல்பாடு மற்றும் வர்த்தக போட்டியின் காரணமாக இந்த தொழிற்சாலையில் உற்பத்தி குறைய துவங்கியது. சில ஆண்டுகளிள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

கடைசி ஸ்லைடரில் உள்ள விடியோவை பார்க்கவும்..

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

உற்பத்தி முடங்கி விட்ட நிலையில் இந்நிறுவனம் ஊழியர்களை குறைக்க துவங்கியது, இதனை உணர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு வேறு வழி இல்லாமல் ஊழியர்களுக்கு உதவும் வகையில் அதிக சலுகையுடன் விஆர்எஸ் வழங்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இதன் படி முதற்கட்டமாக 700 ஊழியர்களுக்கு விஆர்எஸ் அளித்தது.

புதிய சீஇஒ

புதிய சீஇஒ

செவ்வாய் கிழமை காலை தான் இந்நிறுவனத்தின் புதிய சீஇஒவாக ராஜீவ் சூரி பதவியேற்றினார். இத மறக்காம பாருங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Court asks Nokia to pay 10% of sales tax demand

The Madras High Court today asked Nokia to pay 10% of the Tamil Nadu sales department's tax claim. The direction came on the ongoing Rs 2,400 crore tax dispute between Nokia and Tamil Nadu sales department.
Story first published: Tuesday, April 29, 2014, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X