டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, சிங்கப்பூரைச் சேர்ந்த மதுபான முதலீட்டாளரான ரவி விஸ்வநாதன் உடன் இணைந்து சூலா வைன்ஸ் நிறுவனத்தின் 30 சதவிகிதப் பங்குகளை சுமார் 200 கோடி ரூபாய்க்கு வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி கேஎஃப்சி போன்ற வறுத்த சிக்கன் வியாபாரத்தை துவங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. உண்மையிலே இது நல்ல காம்பினேஷன் தான். தம்பி சரக்கு வியாபாரம், அண்ணன் சிக்கன் வியாபாரம்.
தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ், வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பெரும் மதுபனத் தயாரிப்பாளரான சூலா வைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனமாகிய நாசிக் வின்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளரான எவர்ஸ்டோன் ப்ரைவேட் ஈக்விடியின் 30 சதவிகிதப் பங்குகளை வாங்க அனில் அம்பானியும் விஸ்வநாதனும் அணி சேர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மதுபான விற்பனை
மதுபான நிறுவனப் பங்குகளை அனில் அம்பானி வாங்குவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2012ஆம் ஆண்டு, இதே கூட்டணி உள்ளூர் மதுபான நிறுவனமான குரோவர் ஜாம்பா என்ற நிறுவனத்தின் 18 சதவிகிதப் பங்குகளை வாங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக, சூலா வைன்யார்ட்ஸ் நிறுவனத்தை திறமையாக எதிர்கொள்ளும் நிலையில் குரோவர் நிறுவனம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
விஸ்வநாதன்
சூலாவில் பங்குகள் வாங்கும் முயற்சி அம்பானியைப் பொருத்த வரையில் ஒரு நிதி முதலீடு மட்டுமே என்றாலும், விஸ்வநாதன் பதப்படுத்தப்பட்ட மதுபானப் பிரியர். மேலும் பதப்படுத்தும் கிடங்குகளுக்கு அப்பாற்பட்டு, சிங்கப்பூரில் பையான் ரஷ்யன் ஹாட் குசின் அண்ட் காவியர் பார் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
பிரபலமாக இதும் ஒரு வழி
சமீபத்தில் ஃபின்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு மிகவும் விலைமதிப்பான ஷாம்பெய்ன் மதுபானத்தை சுமார் 40,000 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியதன் மூலம் செய்திகளில் பிரபலமானார்.
சூலா வைன்ஸ்
எகனாமிக் டைம்ஸ் செய்திகளின்படி, சூலாவின் நிறுவனர் ராஜீவ் சமந்த் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்வார் எனவும், அவருடைய குடும்பம் தொடர்ந்து 45 சதவிகிதப் பங்குகளுடன் பெரும் முதலீட்டாளர்களாக இருப்பார்கள் எனவும் தெரிகிறது.
சந்தை
இந்த உள்ளூர் மதுபான பிராண்டு 16 லட்சம் பெட்டிகளுடன் நாட்டின் மதுபானச் சந்தையில் 60 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. (மது விட்டிற்கு நாட்டிற்கும் கேடு..)
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications