லாபகரமாக பிஸ்னஸ் செய்ய ஹாங்காங் தான் பெஸ்ட்!!

சென்னை: ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அந்நாட்டின் வர்த்தகத்தையே சார்ந்த இருக்கும். மேலும் நாம் செய்யும் வர்த்தகம் நம்மை மட்டும் சார்ந்து இருப்பதில்லை பல விதமான காரணிகளையும் சார்ந்தே செயல்படுகிறது இந்த வகையில் தொழில் செய்யும் இடமும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

நாம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலாவாகவும் பொழுதுபோக்கிற்காகவும் சென்றிருப்போம், இது மிகவும் சுலபமான விஷயம். ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் தொழிலை துவங்குவது சாதாரண காரியம் அல்ல. சுமூகமான சூழலில் நல்ல தொழிலைத் தொடங்க ஒரு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று. இதை கருத்தில் கொண்ட புளூம்பெர்க்.காம் என்ற இணையதளம் தொழில்களை சிறப்பான முறையில் ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பாட்டியலில் டாப் 10 இடங்களில் இந்தியா இல்லை என்பது மிகவும் வருந்ததக்க விஷயம்.

ஹாங்காங்

ஹாங்காங்

உலகின் முன்னணி பன்னாட்டு நிதி மையமான ஹாங்காங் பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வாய்ப்புகளையும் புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஏற்படுத்தித் தருவதுடன் தொழில் தொடங்கும் செலவானது இங்கே பல நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. வளரும் பொருளாதாரம், விரிந்துவரும் மொத்த உள் நாட்டு உற்பத்தி மற்றும் மிகவும் குறைவான வேலையின்மை ஆகியவை இதற்கு பக்கபலமாக உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பதால் இங்கு நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து தொழில் செழிக்க வழிவகுக்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 83.4 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

கனடா

கனடா

கனடாவும் அமெரிக்காவும் சச்சரவற்ற பெரும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதோடு பெருமளவு வியாபார கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. இதில் இந்தியாவும் இரு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளதோடு நல்ல வியாபார உறவுகளையும் கொண்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பணியாளர் சம்பளம் கட்டுக்குள் இருப்பதால், இங்கு சற்று குறைந்த முதலீட்டிலேயே தொழிலைத் தொடங்கிவிட முடியும். மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 81.5 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா உலகின் மிக வலிமையான நாடாகக் கருதப்படுவதோடு தொழில் செய்பவர்களுக்கு ஒரு பரபரப்பான இடமும் கூட. கணக்கில் அடங்கக்கூடிய பணியாளர் சம்பளம் மற்றும் கட்டுமானச் செலவுகள் இங்கே தொழிலைத் தொடங்கத் தேவையான செலவைக் கட்டுக்குள் வைக்கிறது. இங்குள்ள நுகர்வோர் நன்கு பண்பட்டவர்களாகவும் பொருளாதார ரீதியாக சிறப்பாகவும் இருப்பதால் தொழில் செய்ய ஏற்றதாய் உள்ளது. இங்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டணங்கள் சராசரியாக இருப்பதால் தொழிலை நல்ல முறையில் நடத்த வழிவகுக்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 80.2 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கபூரின் பொருளாதாரம் மற்றும் ஊழலற்ற சூழ்நிலை ஆகியவை தொழில் செய்வதை எளிதாக்குவதுடன் சிறப்பாக செய்யவும் உதவுகிறது. பாராட்டத்தக்க கட்டமைப்பு வசதிகள், தேர்ந்த தொழிலாளர்கள் சக்தி மற்றும் வலிமையான நீதிமுறை ஆகியவை மூலம் சிங்கப்பூர் பன்னாட்டு முதலீடுகளுக்கும் வியாபாரங்களுக்கும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 80.1 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

வளர்ந்துவரும் நுகர்வோர் எண்ணிக்கை, செல்வச் செழிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஆஸ்திரேலியா ஒரு பெரும் சந்தையாக வளர்ந்துவருவதோடு ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்கிறது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார மலர்ச்சி, அளவில்லா இயற்கை வளங்கள் மற்றும் உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் கொள்கைகளால் தொழில் தொடங்க சாதகமாக அமைந்துள்ளன. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.9 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

ஜெர்மனி

ஜெர்மனி

ஆஸ்திரேலியாவிற்கு இணையாகவும், ஐரோப்பியாவில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்கும் ஜெர்மனி, உலகின் ஏற்றுமதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து நாட்டின் மொத்த உற்பத்தியில் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காகவும் கொண்டுள்ளது. தேவைகளை அடிப்படையாகக் கொண்ட அந்நாட்டின் எளிதான கொள்கைகள் புதிய தொழிலுக்கு நட்பான சூழலாகவும் கருதப்படுகின்றது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.9மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

யுனைடட் கிங்டம் (பிரிட்டன்)

யுனைடட் கிங்டம் (பிரிட்டன்)

யுனைடட் கிங்டம் எனப்படும் பிரிட்டன் உலக வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தாக்கத்தைக் கொண்டுள்ளது. தொழிலுக்கு நட்பு பாராட்டும் அரசுக் கொள்கைகள், தொழில் தொடங்க ஆகும் குறைந்த செலவு என தொழில் செய்யத் தேவையான சுதந்திரத்தை நாட்டில் வசிக்கும் அல்லது நாட்டிற்கு தொழில் செய்ய வருவோர்க்கு இந்த நாடு வழங்குகிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.4 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

நெதர்லாந்தின் அமைவிடம் அங்கு தொழில் செய்வோர்க்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த இடம், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி சந்தைகளுக்கு ஒரு முக்கியத் தொடர்பை ஏற்படுத்தி ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கான வாய்ப்பினையும் வழங்குகிறது. பதினாறு லட்சம் பேர் மட்டுமே மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, வணிக வாய்ப்புகளை பெருமளவில் கொண்டுள்ளது என்பதோடு உலகின் மிகப் பெரிய நிறுவனங்களான யுனிலிவர், ஷெல் மற்றும் ஃபிலிப்ஸ் ஆகியவற்றை ஏற்கனவே தன்வசம் கொண்டுள்ளது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 78.0 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பானியர்கள் பேச்சுத்திறமை வாய்ந்தவர்கள். பரபரப்பான சுற்றுலாத்துறை, ஊக்கமிகு பொருளாதாரம் ஆகியவை இந்த நாட்டை ஒரு முக்கிய லாபகரமான தொழில் மையமாக ஆக்கியுள்ளன. சுற்றுவட்ட நாடுகளுடன் கொண்டுள்ள சிறந்த வணிக ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலுக்கு சாதகமான அரசுக் கொள்கைகள் ஆகியவை தொழில் சிறக்கத் தேவையான நீங்கள் விரும்பக்கூடிய சூழலைத் தருகின்றன. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 77.0 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

சுவீடன்

சுவீடன்

அரசின் கொள்கைகள் மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரம் ஆகியவை தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் நுகர்வோர் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நாடு உயர் தொழில்நுட்ப தொழிலகங்கள் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் கலவையில் குறிப்பிடத்தக்க நலன்சார்ந்த பயன்களையும் வாழ்கைத்தரத்தையும் எட்டியுள்ளது என்றே கூறலாம். மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 76.2 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+