மும்பை: இன்றைய மும்பை பங்குசந்தையில் வர்த்தகம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 650 புள்ளிகள் உயர்ந்து, 23,038புள்ளிகளை அடைந்தது. இத்தகைய உயர்விற்கு மோடி அலை, நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே என பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைய வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்வு இந்திய பங்கு சந்தையில் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. அதேபோல் நிஃப்டியில் 6858 புள்ளிகளை அடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் வர்த்தகத்தில் முன்னிலை வகித்தது. அதிகப்படியாக இன்று யெஸ் வங்கியின் 2,653,097 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது, இந்த வர்த்தகத்தின் மதிப்பு 126.24 கோடியாகும்.
இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகள் அதிகளவில் சரிவை தழுவியது குறிப்பிடதக்கது. பயோக் கான், கெலென்மார்க் பார்மா மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் சரிவை தழுவியது.


Click it and Unblock the Notifications