சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு!! சாதகமான சூழ்நிலையில் இந்திய பங்குசந்தை..

மும்பை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் தருவாயில் இந்திய பங்கு சந்தையில் அதிகப்படியான உயர்வை அடைந்து வருகிறது. இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே மும்பை பங்கு சந்தையில் சிறப்பான முன்னேற்றம் இருந்தது, இதனால் சென்செக்ஸில் 467 புள்ளிகள் உயர்ந்துள்ளது, அதேபோல் நிப்ஃடியில் 140 புள்ளிகள் உயர்வை கண்டது.

மேலும் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 22,900 புள்ளிகள் வரை உயராலம் என பங்கு சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கித்துறை பங்குகள்

வங்கித்துறை பங்குகள்

இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் இருந்து இன்று வங்கித்துறை பங்கு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹிந்தால்கோ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி, எல்&டி, எச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் பங்கு சிறப்பான வளரச்சியை அடைந்துள்ளது.

சரிவை சந்தித்த நிறுவனங்கள்

சரிவை சந்தித்த நிறுவனங்கள்

இத்தகைய தருவாயில் பார்மா துறை பங்கு அதிகளவில் உயரவில் என்பது குறிப்பிடதக்கது. முக்கியமாக சமிபத்தில் ரான்பாக்ஸி நிறுவன்த்தை கைபற்றிய சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவன பங்கு சரிவைக் கண்டது.

மொத்த விவரம்

மொத்த விவரம்

பங்கு சந்தையில் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் 1,369 நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது, 882 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தது, மேலும் 113 நிறுவனங்களின் பங்குகள் மாற்றம் இல்லாமல் நேற்றைய நிலையை இன்றும் தொடர்ந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வு

ரூபாய் மதிப்பு உயர்வு

இன்றைய பங்கு சந்தை உயர்விற்கு ரூபாய் மதிப்பும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த வாரம் துவக்கம் முதல் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 60 ரூபாயில் நிலைபெற்று வருவாதால் நாணய சந்தையில் டாலர் மிதான வர்த்தகம் அதிகரித்துள்ளது.

ஆசிய சந்தையின் தாக்கம்

ஆசிய சந்தையின் தாக்கம்

ரஷ்ய உக்ரைன் பிரச்சனைகளால் ஆசிய சந்தையின் வர்த்தகம் சற்று மந்தமாக உள்ளது, மேலும் சினாவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.8 சதவீதமாக இருந்தது, ஆனால் தற்போது 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய காரணங்களால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை குறிவைத்து முதலீடு செய்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+