சென்னை: பின்லாந்து மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை வரி நிலுவை சிக்கலில் சிக்கியிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நிறுவன செலவீனங்களை குறைக்க இத்தொழிற்சாலையின் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நோக்கியா முடிவு செய்தது. இந்நிலையில் இந்நிறுவனம் 5,000 பணியாளர்களுக்கு வி.ஆர்.எஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.
நோக்கிய நிறுவனத்தின் மொபைல் பிரிவை கடந்த வருடம், சாப்ட்வேர் உலகின் ஜம்பாவான் என்று அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிறுவன கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் இத்தொழிற்சாலையும் அடங்கும். ஆனால் வரி நிலுவை பிரச்சனை உள்ளதால் தற்போது நோக்கிய நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் இத்தொழிற்சாலையை நடத்தி வருகிறது.
5000 பணியாளர்கள்
சென்னை தொழிற்சாலை 2006ஆம் ஆண்டு மிகுந்த பொருட் செலவில் 2006ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இத்தொழிற்சாலையில் சுமார் 7,500 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நோக்கிய தற்போது இந்நிறுவனத்தின் 5,000 பணியாளர்களுக்கு விஆர்எஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
மே 14
இந்நிறுவனத்தின் நிதியியல் பிரிவு பணியாளர்கள் விஆர்எஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்க மே 14 வரை காலக்கெடு விதித்திருந்தது. தேர்ந்தெடுக்க முடியாத பணியாளர்களை தக்கவகையில் பணிநீக்கம் செய்யப்படுவது உண்மை.
ஊழியர்களின் வேண்டுகோள்
இந்த விஆர்எஸ் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்குமாறு ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையில் தமிழக அரசு இந்த பிரச்சனைகளை குறித்து பணியாளர்களுக்கு சாதகமான முடிவை எடுக்குவும் கேட்டுக்கொண்டனர்.
வரி நிலுவை
நோக்கியாவின் வரி நிலுவை வழக்கு சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்ற விசாரனைக்கு வந்தது. இதை விசாரித்த நிதிபதி வரி நிலுவையில் 10 சதவீதம் மட்டும் உடனடியாக செலுத்துமாறு உத்திரவிட்டது, மிதமுள்ள தொகையை பின்பு செலுத்துமாறு நோக்கியா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. மேலும் இப்பிரச்சனையால் இத்தொழிற்சாலையை கைபற்ற முடியாமல் மைக்கரோசாரப்ட் நிற்கிறது.
ஊழியர்களின் போராட்டம்
விஆர்எஸ் திட்டத்தை எற்க முடியாத ஊழியர்கள் ஒப்பந்த உற்பத்தியை எதிர்த்தும், வேலை உத்திரவாதத்தை அளிக்கவும் தீவரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நோக்கியா நிறுவனம்
இது குறித்து நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவிக்கையில் "5000 பணியாளர்களுக்கு விஆர்எஸ் வழங்க வேண்டும் என்பது இலக்கு அல்ல, ஆனால் 5000 பணியாளர்களுக்கு விஆர்எஸ் வழங்க தயாராக இருக்கிறோம்" என்று லாபகமாக பதில் அளித்தனர்.
தற்கொலைகள்
இப்பிரச்சனைகளால் நோக்கிய நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் தற்கொலை முயற்சிக்கு இறங்கியுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தமிழக அரசு இதற்கு விரைவான முடிவை அளிக்க வேண்டும். நாளை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக அரசு இதற்கு செவி சாய்க்காது.


Click it and Unblock the Notifications