டெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய நிதியியல் கொள்கையின் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது, இதனால் ஏப்ரல் மாதத்தில் உணவு பொருட்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை குறைந்துள்ளது.
மேலும் மார்ச் மாதத்தில் மொத்த விலை குறியீட்டின் படி நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருந்தது குறிப்படதக்கது. இத்தகைய குறைந்த காலகட்டத்தில் 0.5 சதவீத குறைவு மிகவும் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது.
உணவு பணவீக்கம்
மத்திய அரசு நேற்று மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் உணவு பொருட்களின் பணவீக்கத்த கணித்தது. இதில் மார்ச் மாதம் 9.9 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.64 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் நாம் அறியப்படுவது என்னவென்றால் உணவு பொருட்களின் விலை, மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதம் குறைந்ததை வெளிப்படையாக காட்டுகிறது.
வெங்காயம்..
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட நாட்டு மக்களை அதிகப்படியாக பாதிக்கவில்லை, ஆனால் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு விட்டில் இருக்கும் பெண்களையும் பாதித்தது. ஒரு கிலோ வெங்காயம் வட இந்தியாவில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது தான் கொடுமை. தமிழகத்தில் அச்சமையம் 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டது குறிப்படதக்கது.
அசைவ உணவுகள்
இந்தியாவில் அசைவ உணவு பிரியர்கள் சாரி வெறியர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு செய்தி உள்ளது. முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் பணவீக்கம் 11.19 சதவீதத்தில் இருந்து 9.97 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
காய்கறி விலை தூள் டக்கர்..
காய்கறிகளின் மொத்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.34 சதவீதத்தில் இருந்து 8.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் உருளைகிழங்கு மற்றும் பழங்களின் விலை கடுமையான உயர்வை கண்டுள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு
நுகர்வோர் விலை குறியீடு என்றால் சாதாரண மக்களுக்கு கிடைக்கு பொருட்களின் விலைக் குறியீடு. இக்குறியீடு தற்போது 5.59 சதவீதமக உயர்ந்துள்ளது. இது முன்று மாத உயர்வு என்பது குறிப்பிடதக்கது.
ஜூன் 3
ரிசர்வ் வங்கி வருகிற ஜூன் 3ஆம் தேதி புதிய நிதியியல் கொள்கையை தீட்ட உள்ளது. இதில் வங்கிகளின் வட்டி விகிதங்களை குறைக்கவும், பணவீக்கத்தை குறைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ரிசர்வ் வங்கி திட்டங்களை தீட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications