தொடர் சரிவில் தங்கம் விலை!!
சென்னை: இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே தங்கம் விலை சரிய துவங்கியது இதனால் ஒரு கிராமிற்கு 14 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.77 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 14ரூபாய் குறைந்து 2726.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 12ரூபாய் குறைந்து 2918.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.27,260
ஹைதராபாத் : ரூ.27,200
பெங்களூரு : ரூ.27,180
கொல்கத்தா : ரூ.27,240
டெல்லி : ரூ.27,180
மும்பை : ரூ.27,220


Click it and Unblock the Notifications