சென்னை: மலேசியாவைச் சேர்ந்த ஏர்ஏசியா விமான நிறுவனம், டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவை துவங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதை தொடந்தும் வரும் ஜூன் மாதம் இந்தியாவில் தன்னுடைய சேவையைத் தொடங்குவதாக இந்நிறுவனறும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதன் முதல் விமானம் பயனம் ஜூன் 12ம் தேதி பெங்களூருவிலிருந்து கோவாவுக்குப் பறக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்குகிறது.
டிவிட்டரில் விளம்பரம்
ஏர்ஏசியாவின் தாய் நிறுவனமான ஏர்ஏசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டோனி ஃபெர்னாண்டஸ் தன்னுடைய டிவிட்டரில் முதல் பயன தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே 8ஆம் தேதி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மும்பைக்கு சேவை இல்லை
இந்தியாவில் ஏர்ஏசியாவின் தலைமையகம் சென்னையில் இருந்தாலும், அதன் முதல் சேவை பெங்களூருக்கும் கோவாவுக்கும் இடையில் என்பது குறிப்பிடதக்கது. ஆனாலும் மும்பை தவிர பிற மெட்ரோ நகரங்களுக்கு இவ்விமான சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி
ஏர்ஏசியா பெர்ஹாட், டாடா சன்ஸ் மற்றும் தனியார் முதலீட்டாளர் அருண் பாட்டியா ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்தியவில் விமான சேவை துவங்கும் ஏர்ஏசியா நிறுவனம், இந்தியாவில் உள்ள பிற விமான நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலிவு விலை சேவை
இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களைவிட ஏர்ஏசியா விமானங்களில் மிகவும் குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 30 முதல் 35 சதவீதம் வரை குறைவாகவே ஏர்ஏசியாவின் கட்டணங்கள் இருக்கும் என இந்நிறுவனத்தின் சீஇஓவான மித்துன் தெரிவித்துள்ளார்.
சவால் நிறைந்த துறை
குறைந்த விமானக் கட்டணங்கள், அதிக எரிபொருள் செலவு என்று ஏற்கனவே தள்ளாடி வரும் பல இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்தியில் பெரும் சவால்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஏர்ஏசியாவும் தற்போது களத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் நஷ்டம்
மேலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் பல விமான நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்து வந்ததுள்ளது. ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர்இந்தியா.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications