சென்செக்ஸ், நிஃப்டியில் புதிய உச்சம்!! ரிலையன்ஸ் பங்குகள் 3% உயர்வு!!
மும்பை: மும்பை பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் 25,380.40 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் மிகவும் சிறப்பாக செயல்பட்ட சந்தை இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 360.89 புள்ளிகள் அல்லது 1.44 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் நிஃப்டியில் 102.05 புள்ளிகள் அல்லது 1.37 சதவீதம் உயர்ந்து 7516.15 புள்ளிகள் எட்டியுள்ளது. பங்கு சந்தை நிலையான வளர்ச்சியை பெற்று வந்தால் நிஃப்டி 2015ஆம் ஆண்டுக்குள் 8,500 முதல் 9,000 புள்ளிகள் வரை உயரும் என பங்கு சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் ஒஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளது.
மேலும் இன்று 2,132 நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளன. 931 நிறுவன பங்குகள் சரிந்துள்ளன. 82 நிறுவன பங்குகள் நிலை மாறாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications