டெல்லி: அதிகப்படியான அன்னிய முதலீடு மற்றும் சிறப்பான செயல் திட்டங்களின் மூலம் இந்தியா நடப்பு நிதியாண்டில் 5.5 முதல் 6 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும், மேலும் அடுத்த 4 வருடங்களில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 - 8 சதவீதத்தை எட்டும் என எச்.டி.எப்.சி வங்கியின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மிகவும் மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்த நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 4.7 சதவீதத்தில் இருந்த 8 சதவீதம் எட்டும் வேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தீபக் பரேக் எஸ்.பி.ஐ கேப்பிடல் மார்கெட் தலைமையில் நடந்த பி.எஃப்.எஸ்.ஐ கூட்டத்தில் தெரிவித்தார்.

புதிய அரசின் பட்ஜெட்-யை அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் ஜூலை 2ஆம் தேதி நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கலில் கட்டுமான திட்டங்களுக்கு அதிகளவில் முக்கியதுவம் அளிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் இந்தியாவில் பல முக்கியமான கட்டுமான திட்டங்கள் கிடப்பில் உள்ளது, இவை அனைத்திற்கும் ஒப்புதல் கிடைத்தால் பண உள்ளீடு அதிகரிக்கும். அதனால் வங்கி செயல்பாடு சிறப்பான நிலையை அடையும் என அவர் தெரிவித்தார்.
இந்த கட்டுமான திட்டங்களுக்கு கடன் கொடுக்கும் போது வராக் கடன் அளவை கணக்கிட்டு கடன் வழங்குமாறு தீபக் பரேக் வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications