டெல்லி: ஈராக்கில் நடக்கும் பிரச்சனைகளின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை தொடர்ந்து, இன்று மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. 10 கிராம் தங்கத்திற்கு இறக்குமதி வரியாக 411 டாலரும், 1 கிலோ வெள்ளியின் இறக்குமதி வரியாக 632 டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.
இதற்கு முன் தங்கத்திற்கு 408 டாலராகவும், வெள்ளிக்கு 617 டாலராகவும் இறக்குமதி வரி இருந்தது குறிப்பிடதக்கது. இத்தகைய இறக்குமதி வரி அதிகரிப்பால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தாலும், தங்கம் கடத்தல் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஈராக் பிரச்சனை முடியும் வரை தங்கம், வெள்ளி, மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் நிலைற்ற தன்மையில் இருக்கும்.

மேலும் இந்த விலை மாற்றம் பற்றிய அறிவிப்பை கலால் மற்றும் சுங்க மத்திய வாரியம் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ஆலோசனை செய்து கடந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் சில தளர்வுகளை அறிவித்தது. இதனால் தங்கம் இறக்குமதியில் சிறப்பான வளர்ச்சை எதிர்ப்பார்க்க முடிந்தது.
சில மாதங்கள் முன்பு வரை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க தங்க இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. இதனால் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்க இறக்குமதி சுமார் 74 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டு தங்கத்தின் மதிப்பு 1.75 பில்லியன் டாலர்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications