சென்னை: இன்று சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 2681.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் இன்று 5 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து மஞ்சள் உலோகமான தங்கத்தின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியின் வரியை அதிகரித்ததே ஆகும். தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது, இன்று சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 470 ரூபாய் அதிகரித்து 45,106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6 ரூபாய் அதிகரித்து 2865.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 32ரூபாய் உயர்ந்து 2681.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,800
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,780
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,840
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,730
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,810
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,750
வெள்ளி
1 கிலோ வெள்ளியின் விலை 470 ரூபாய் அதிகரித்து 45,106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிகப்படியாக பெங்களூரில் 45,238 ரூபாய்க்கும், குறைந்தபடியாக மும்பையில் 45,088 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 60.13 என்ற வீதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய்
மேலும் ஈராக் அரசு மற்றும் தீவரவாதிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை தொடரந்து அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் தேவையை, பிற நாடுகளிடம் இருந்து பூர்த்தி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications