மும்பை பங்கு சந்தை 26,000 புள்ளிகளை தொட்டு சாதனை!!

மும்பை: கடந்த சில மாதங்களாக மும்பை பங்கு சந்தை தொடர் சாதனை மழையில் நினைந்து வருகிறது. இந்த சாதனை மழையில் புயலாக இன்று மும்பை பங்கு சந்தையில் 26,000 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை 25,000 புள்ளிகளை எட்டிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய மும்பை பங்கு சந்தை கடந்த 2 வார காலமாக 25,500 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்து வந்தது குறிப்பிட தக்கது.

இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் அமர்வு கூட்டம் துவங்கிய காரணத்தினால் பங்கு சந்தை சூப்பர் ஸ்டார் போல புதிய உயரங்களை தெட்டு வருகிறது.

உலக பங்கு சந்தைகள்

உலக பங்கு சந்தைகள்

அமெரிக்காவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தைக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை காலையில் துவங்க உள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தை இன்று காலை மந்தமான நிலையிலே துவங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

மேலும் முதலீட்டாளர்கள் கார்ப்ரேட் நிறுவனங்களை குறிவைத்து அதிகப்படியான லாபத்தை பெற இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்து வருகினறனர். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தனியார் நிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறையின் தனியார் நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு அதிகளவில் செய்துள்ளதே ஆகும்.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

2014ஆம் ஆண்டு பட்ஜெட்டின் முதல் அமர்வு கூட்டம் இன்று துவங்கிய காரணத்தால் இந்திய சந்தைகள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளுக்குள் பங்கு சந்தை 26,800 புள்ளிகள் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டி தற்போது 7,775.80 புள்ளியில் உள்ளது, மேலும் ஜூலை 10 தேதியண்று 8,000 புள்ளிகளை கண்டிப்பாக எட்டும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று பல முதலீடு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளது.

டாப் டக்கரான பங்குகள்

டாப் டக்கரான பங்குகள்

ஐ.டி.எஃப்.சி, அதானி போட்ஸ், எஸ்.பி.ஐ, ரிலையனஸ் இன்பரா, ஆகிய நிறுவன பங்குகள் இன்று அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

நஷ்டத்தை சந்தித்த பங்கள்

நஷ்டத்தை சந்தித்த பங்கள்

இன்ற வர்த்தகத்தில் இந்திய வங்கிகள், அதிலும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மிகவும் மந்தமாக செயல்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+