மும்பை: மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தக துவக்கத்திலேயை சரிவை சந்தித்தது.
சற்றும் எதிர்பாராத நிலையில் மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்திலேயே சரிவை தழுவியுள்ளது. அந்த நிகழ்வு மத்திய பட்ஜெட்டின் முகத்திரை கிழிந்தது போலவே அமைந்தது.
மேலும் அவர் உரையாற்றும் போது களைப்பின் காரணமாக இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார், இந்த தருணத்தில் தான் பங்கு சந்தை 300 புள்ளிகள் சரிந்தது. பின்பு மதியம் 1 மணியளவில் சந்தை மீண்டும் உச்சம் பெற்றும் 25,662 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இன்று பங்கு சந்தை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்ததுள்ளது.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதலே சரிவுடனே துவங்கியது. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை 25,444.81 புள்ளிகளிள் முடிவடைந்தது இன்று காலை 25410 புள்ளிகள் சரிவடைந்தது. இதனால் சந்தை முதலீட்டாளர்களின் வர்த்தகம் குறைந்துள்ளது.
நிப்டி
மும்பை பங்கு சந்தை போல் நிப்டியிலும் இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 20 புள்ளிகள் சரிந்தது. சில நிமிடங்களுக்கு முன்புதான் சந்தை மீட்சியடைந்துள்ளது.
5 நிமிட இடைவேளை
பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சரின் களைப்பின் காரணமாகவோ அல்லது அவை கூச்சலின் காரணமாகவோ 5 நிமிட இடைவேளையை சபாநாயகர் அறிவித்தார். இந்த இடைவோளையில் மட்டும் சுமார் 300 புள்ளிகள் குறைந்தது.
சரிவில் தத்தளிக்கும் பெரு நிறுவனங்கள்
டிசிஎஸ், சிப்லா, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி போன்ற சந்தையின் பெரும் புள்ளிகளாக திகழும் நிறுவனங்களும் தலா 1 சதவீதம் சரிவை சந்தித்து வருகிறது.
தப்பித்த நிறுவனங்கள்
இந்தி இக்கட்டான சூழ்நிலையில் எச்.டி.எஃப்.சி, டாடா பவர், கோல் இந்தியா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சியை சந்தித்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications