டெல்லி: வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் முக்கியமான ஒன்றை மறந்து விட்டார் என நினைத்த வேலையில் அதனைக்குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அது வேறு ஒன்றும் இல்லை தங்க இறக்குமதி பற்றிதான்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தங்க இறக்குமதியின் மீது அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவானது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை அளித்தது. ஆனால் இறக்குமதி தங்கத்தை நம்பி இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகம் செய்யப்படுகிறது. புதிய அரசி ஆட்சிக்கு வந்த உடன் தங்க இறக்குமதியில் சில மாற்றங்களை செய்தது, இதனால் அதிகளவில் தங்க கடத்தல் குறைந்தாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் தளர்க்க முடியாது
மேலும் வெள்ளிகிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தங்க இறக்குமதியில் இருக்கும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக தற்போது தளர்க்க முடியாது. நிதி நிலைமை சரியான பின்பு அதன் மீதுள்ள கட்டுப்பாடுகள் கண்டிப்பாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிவ் அண்டு டேக் பாலிசி
செய்தியாளர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்போது கண்டிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மற்றும் அதில் இருக்கும் அளவீடுகளில் மாற்றம் இருக்கும். அதுவரை இத்துறை பொறுமை காப்பது அவசியம், அதைவிட நாட்டின் பொருளாதாரத்தை மேம்படும்பட வேண்டும் எண்ணம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
தற்போது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதன், காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. எனவே நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதில் மிகந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளின் எதிரொலி
இரண்டு மத்திய அரசுகளும் விதித்த கட்டப்பாடுகளின் எதிரொலியின் காரணமாக தங்கு இறக்குமதி சுமார் 72 சதவீதம் குறைந்துள்ளது. அதிகப்படியான டாலர் இருப்பு குறைந்ததால் 201-13ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.7ஆக குறைந்தது. இதன் முக்கிய காரணம் தங்கம் மற்றும் வெள்ளியின் அதிகப்படியான இறக்குமதி தான்.
ரூபாய் மதிப்பு
சந்தையில் நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60.14 ரூபாய் என்ற விதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications