ஸ்பிரிங் ரோல் வேணுமா, பர்கர் வேணுமா??...திகார் ஜெயிலில் ராஜ உபசாரம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆசியாவில் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான திகார் ஜெயில், சிறை கைதிகளை கொண்டு ஒரு புதிய ரெஸ்டாரெண்ட் துவங்க உள்ளது. இதில் பணியாற்றும் கைதிகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு சிறந்த உணவையும், உபசரிப்பையும் அளிக்க திகார் ஜெயில் முடிவு செய்துள்ளது.

 

இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் ஏ.சி வசதி கொண்டது. இந்த ரெஸ்டாரெண்டுக்கான பணிகள் ஜெயில் ரோட்டில் நடைபெற்று வரும் நிலையில் முழுமையாக செயல்பட சில நாட்கள் ஆகும் எனவும் திகார் ஜெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு பயிற்சி

கைதிகளுக்கு பயிற்சி

இது குறித்து திகார் ஜெயில் பிஆர்ஒ சுனில் குப்தா கூறுகையில்," குறைந்த விலையில் ரெஸ்டாரெண்ட் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை அளிப்பதே எங்கள் முடிவு" என அவர் தெவித்துள்ளார். மேலும் அவர் திகார் ஜெயிலின் சில செமி-ஓப்பன் கைதிகள் சுற்றுலா துறையின் உதவி கொண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியை பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

கைதிகள் தேர்வு

கைதிகள் தேர்வு

இந்த பணிகளுக்கு, 12 வருடத்திற்கு குறைவான ஜெயில் தண்டனை மற்றும் நன்நடத்தை பெற்றிருந்தால் மட்டுமே செமி-ஓப்பன் கைதிகளாக தகுதி பெறுவார்கள். அவர்களின் சிறந்த ஆட்களை மட்டுமே இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

மேலும் இந்த ரெஸ்டாரெண்ட் பற்றி மக்கள் மத்தியில் மிகவும் நல்லபடியாக பேசப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் ரெஸ்டாரெண்ட் மெனுவை பற்றி அறிந்துக்கொள்ள பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

50 இருக்கை மற்றும் ஹோம் டெலிவரி
 

50 இருக்கை மற்றும் ஹோம் டெலிவரி

இந்த ரெஸ்டாரெண்ட் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்படும் எனவும், ரெஸ்டாரெண்ட் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் ஹோம் டெலிவரி அளிக்கப்படும் என ஜெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காலை மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ரெஸ்டாரெண்ட் செயல்படும்

உறவுகள் மேம்படும்..

உறவுகள் மேம்படும்..

இந்த முயற்சி ஜெயில் கைதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல உறவையும் அனுகுமுறையையும் அளிக்கும். இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் அதரவளிக்க வேண்டியது கடமை என்று சொன்னாலும் கச்சிதமாக பொருந்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tihar Jail sets up restaurant, inmates to cook and serve food

Delhi's Tihar Jail has set up a restaurant where its inmates trained in hotel management will cook and serve food.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X